வீடு / சமையல் குறிப்பு / கல்லூரி லன்ச் ஃபாக்ஸ்

Photo of Veg college lunch box by Karuna Pooja at BetterButter
1013
1
4.4(0)
0

கல்லூரி லன்ச் ஃபாக்ஸ்

Aug-28-2018
Karuna Pooja
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கல்லூரி லன்ச் ஃபாக்ஸ் செய்முறை பற்றி

கல்லூரி செல்லும் சகோக்களுக்கு திருப்தியான முறையில் தயிக்கும் மதிய உணவு‌

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ரோசஸ்டிங்
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சீரக சம்பா அரிசி 400 கிராம்
  2. கோதுமை மாவு 200 கிராம்
  3. முட்டை 4
  4. மல்லி புதினா நறுக்கியது 1கைப்பிடி அளவு
  5. பட்டை 1 இரண்டு சிறிய துண்டுகள்
  6. ஏலக்காய்-3
  7. கிராம்பு-3
  8. வெங்காயம் 150 கிராம்
  9. தக்காளி 100 கிராம்
  10. பச்சை மிளகாய் 4
  11. தேங்காய்ப் பால் 1 கப்
  12. மிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன்
  13. பிரியாணி இலை சிறியதாக 1
  14. முட்டை மசாலா 1½ டீஸ்பூன்
  15. மஞ்சள் தூள் சிறிதளவு
  16. சீரகப் பொடி ½ டீஸ்பூன்
  17. உப்பு தேவையான அளவு
  18. நெய் 3 தேக்கரண்டி
  19. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முட்டையை வேக வைக்கவும்
  2. முட்டை வெந்ததும் தோலை நீக்கி சிறிது ஒரு டீஸ்பூன் எண்ணெயில்,கரம்மசால மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு இவற்றை சேர்த்து முட்டை நன்கு வறுக்கவும்.... பின்னர் இதனை தனியே வைக்கவும்.
  3. கோதுமை மாவில் உப்பு தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு நன்கு பிசைந்து மூடி தனியே வைக்கவும்
  4. ஒரு குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து பொரிய விடவும்
  5. நறுக்கிய(100கி) வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
  6. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  7. கரம் மசாலா தூள் இது தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்
  8. நறுக்கிய புதினா மல்லித்தழை சேர்த்து வதக்கவும்
  9. அரிசியின் அளவு தண்ணீரில் ஒரு பங்கு தேங்காய்ப்பாலும்
  10. ஒரு பங்கு தண்ணீர் சேர்க்க வேண்டும்
  11. கொதி வரும் போது அரிசியை சேர்க்க வேண்டும்
  12. அரிசி நன்கு வெந்து தண்ணீர் வற்றியதும் 10 நிமிடம் வைக்கவும்
  13. தம் வைத்து இறங்கினால் சுவையான தேங்காய் பால் புலாவ் ரெடி.....
  14. மற்றொரு அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  15. இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  16. முட்டை மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  17. தக்காளி சேர்த்து வதக்கவும்
  18. தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்
  19. தக்காளி நன்கு வெந்து வெளியான பின்பு முட்டையை சேர்த்து வதக்கவும்
  20. 2 நிமிடம் பிரட்டி எடுத்தால் முட்டை மசாலா ரெடி
  21. இப்போது சப்பாத்தியை தேய்த்த சுட்டு எடுக்கவும்.
  22. சப்பாத்தி தயார்.
  23. கல்லூரி செல்வோருக்கான சுவையான ஆரோக்கியமான மதிய உணவு தயார் 1)தேங்காய் பால் புலாவ் 2) முட்டை கறி 3) சப்பாத்தி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்