வீடு / சமையல் குறிப்பு / பண்டிகை காலங்களில் குழந்தைகளுக்கான டிபன் பாக்ஸ்

Photo of Festival time children's tiffen box by Balajayasri Dhamu at BetterButter
301
0
0.0(0)
0

பண்டிகை காலங்களில் குழந்தைகளுக்கான டிபன் பாக்ஸ்

Aug-28-2018
Balajayasri Dhamu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பண்டிகை காலங்களில் குழந்தைகளுக்கான டிபன் பாக்ஸ் செய்முறை பற்றி

மினி இஞ்சி பருப்பு இட்லி, கொழுக்கட்டைசுண்டல், தேங்காய் பூர்ண கொழுக்கட்டை இவை பண்டிகை காலங்களில் செய்து கொடுக்க கூடிய டிபன் பாக்ஸ் வகை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இஞ்சி பருப்பு இட்லி
  2. துவரம் பருப்பு1கப்
  3. பாசி பருப்பு1/2கப்
  4. கடலை பருப்பு3ஸ்பூன்
  5. வர மிளகாய்3
  6. இஞ்சி நறுக்கியது 2தேக்கரண்டி
  7. உப்பு
  8. கறிவேப்பிலை2கொத்து
  9. கொத்தமல்லி தழை சிறிது
  10. பச்சை மிளகாய் 2
  11. கடுகு1ஸ்பூன்
  12. உளுந்து1,ஸ்பூன்
  13. கொழுக்கட்டை சுண்டல்
  14. அரிசி மாவு1கப்
  15. தண்ணீர்11/2கப்
  16. உப்பு தேவையான அளவு
  17. கடுகு1/2ஸ்பூன்
  18. உளுந்து1ஸ்பூன்
  19. கடலைப்பருப்பு1ஸ்பூன்
  20. கறிவேப்பிலை சிறிது
  21. பச்சை மிளகாய்2
  22. மஞ்சள் தூள்1/4ஸ்பூன்
  23. நல்ல எண்ணெய்25மிலி
  24. தேங்காய் துருவல் 1/4கப்
  25. தேங்காய் பூர்ண கொழுக்கட்டை
  26. தேங்காய் துருவல்1கப்
  27. முந்திரி4
  28. சர்க்கரை1 கப்
  29. நெய் தேவையான அளவு
  30. அரிமாவு 1கப்
  31. தண்ணீர்11/2கப்
  32. உப்பு தேவையான அளவு
  33. நல்ல எண்ணெய்5ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் துவரம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
  2. பின் மிக்ஸியில் பருப்பு வரமிளகாய் போட்டு அரைத்து கொள்ளவும்
  3. அரைத்தவற்றில் கடலை பருப்பு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து மாவில் போட்டு கலந்து கொள்ள வேண்டும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  4. பின்னர் 6மணிநேரம் கழித்து
  5. தாளிப்பு கரண்டியில் கடுகு,உளுந்து, கடலைப்பருப்பு நறுக்கிய பச்சை மிளகாய்,இஞ்சி தாளித்து மாவில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  6. பின்னர் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கி சேர்க்கவும்
  7. இப்போது இட்லி தட்டில் எண்ணெய் தேய்த்து மாவை எடுத்து ஊற்றி கொள்ள வேண்டும்
  8. ஆவியில் 10நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
  9. இப்போது சுவையான மினி இஞ்சி பருப்பு இட்லி ரெடி
  10. கொழுக்கட்டை சுண்டல் மற்றும்தேங்காய் பூரண கொழுக்கட்டை
  11. அடி கனமான வாணலியில் அரிசி மாவு, உப்பு ,தண்ணீர் ஊற்றி நன்குகரைத்து கொள்ளவும்
  12. பின்னர் அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் நல்ல எண்ணெய் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்
  13. மாவு கெட்டி தன்மை ஆகும் வரை கிளறவும்அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்ய வேண்டும்
  14. பின்னர் அடுப்பை அணைத்து தட்டை வைத்து முடி வைக்க வேண்டும்
  15. இந்த மாவை 2 பங்குஎடுத்து கொள்ள வேண்டும் சுண்டல் செய்ய, கொழுக்கட்டை செய்ய
  16. பின்னர் கையில் நல்ல எண்ணெய் தேய்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ள வேண்டும்
  17. இட்லி தட்டில் வைத்து10 நிமிடம் வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும்
  18. பின்னர் வாணலியில் நல்ல எண்ணெய் 2ஸ்பூன் விட்டு கடுகு, உளுந்து, கடலை பருப்பு தாளித்து கொள்ள வேண்டும்
  19. கறிவேப்பிலை சேர்த்து பெருங்காயம்தூள் சேர்த்து தாளித்து கொள்ள வேண்டும்
  20. தேங்காய் துருவல் சேர்த்து வணக்கவும்
  21. சிறிது உப்பு ,மஞ்சள் தூள் சேர்த்து கொள்ள வேண்டும்
  22. வேக வைத்த உருண்டைகளை சேர்த்து கிளறி இறக்கவும்
  23. இப்போது கொழுக்கட்டை சுண்டல் ரெடி
  24. தேங்காய் பூரண கொழுக்கட்டை:
  25. வாணலியில் நெய் விட்டு முந்திரி வறுத்து கொள்ள வேண்டும்
  26. பின் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வறுத்து கொள்ளவும்
  27. சர்க்கரை சேர்த்து வறுத்து கொள்ளவும்
  28. ஏற்கனவே செய்த மாவில் 2வது பங்கு எடுத்து கொள்ள வேண்டும்
  29. பின்னர் கையில் எண்ணெய் தேய்த்து இவற்றை கிண்ணம் போல செய்ய வேண்டும்
  30. அவற்றில் தேங்காய் பூரண வைத்து கொண்டு மூடி விரல் நுனியில் அமிழ்த்து விட வேண்டும் கொழுக்கட்டை மோல்டில் பயன்படுத்தி செய்யலாம்.
  31. இதை இட்லி தட்டில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து கொள்ள வேண்டும்
  32. இப்போது தேங்காய் பூரண கொழுக்கட்டை ரெடி
  33. டிபன் பாக்ஸில் ஒரு வாழை இலை போட்டு அனைத்தையும் வைத்து கொள்ள வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்