வீடு / சமையல் குறிப்பு / சாதம் ரசம் தண்டு கீரை பொரியல்

Photo of Rice Rasam spinach by Rachell Revathi Samuel at BetterButter
999
1
0.0(0)
0

சாதம் ரசம் தண்டு கீரை பொரியல்

Aug-28-2018
Rachell Revathi Samuel
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சாதம் ரசம் தண்டு கீரை பொரியல் செய்முறை பற்றி

எளிமையான சிம்பிள் லன்ச்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி 1 கப்
  2. ரசம்: மிளகு 2 ஸ்பூன்
  3. சீரகம் 2 ஸ்பூன்
  4. பூண்டு 10 பல்
  5. தக்காளி 2
  6. புளி நெல்லிக்காய் அளவு
  7. பெருங்காயம்
  8. மிளகாய் வற்றல் 2
  9. தண்டுக்கீரை 1 கட்டு
  10. வெங்காயம் 1
  11. கருவேப்பிலை சிறிது
  12. பச்சை மிளகாய் 2
  13. உப்பு தேவையான அளவு
  14. தேங்காய் துருவல் 4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தக்காளியை தண்ணீரில் போட்டு அடுப்பில் வைத்து வேக விடவும்.
  2. புளியை தண்ணீரில் ஊற வைக்கவும்.புளியை தண்ணீரில் கரைத்து வைக்கவும் .
  3. தக்காளி ஆறியதும் தோல் நீக்கிக் பிசைந்து கொள்ளவும். அல்லது தோல் நீக்கிய தக்காளியை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.அதனுடன் புளிக்கரைசலை சேர்த்து கொள்ளவும்.
  4. சீரகத்தை தட்டி கொள்ளவும்.
  5. மிளகு மற்றும் வெள்ளை பூண்டையும் தட்டி கொள்ளவும்.
  6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
  7. கருவேப்பிலை மிளகாய் வற்றல் சேர்க்கவும்.பெருங்காயம் சேர்க்கவும்.
  8. தட்டி வைத்த மிளகு சீரகம் பூண்டு சேர்த்து வதக்கவும்.
  9. தக்காளி மற்றும் புளிக்கரைசல் சேர்த்த கரைசலை சேர்க்கவும்.
  10. மஞ்சள்தூள் சேர்க்கவும்.
  11. நுரை விட்டதும் அடுப்பை அணைத்து விடவும்.
  12. ஒரு பாத்திரத்தில் உப்பு மற்றும் கொத்தமல்லி தழை போட்டு வைக்கவும்.
  13. அடுப்பை அணைத்ததும் ரசத்தை அந்த பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும்.
  14. தண்டுக்கீரை பொரியல்: தண்டுக்கீரையை சுத்தம் செய்து கழுவி நறுக்கிக் கொள்ளவும்.
  15. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.சீரகம் சேர்க்கவும்.
  16. வெங்காயம் கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  17. கீரையை சேர்த்து வதக்கவும்.
  18. நன்றாக வதக்கவும்.
  19. கீரை வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.
  20. சுவையான ஆரோக்கியமான தண்டுக்கீரை பொரியல் தயார்.
  21. அரிசியை 2 மடங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.
  22. சிம்பிள் லன்ச் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்