வீடு / சமையல் குறிப்பு / சப்பாத்தி நூடுல்ஸ்

Photo of Chapathi Noodles by Rachell Revathi Samuel at BetterButter
0
1
0(0)
0

சப்பாத்தி நூடுல்ஸ்

Aug-28-2018
Rachell Revathi Samuel
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

சப்பாத்தி நூடுல்ஸ் செய்முறை பற்றி

சப்பாத்தியை நூடுல்ஸ் போன்று வெட்டி செய்யப்படும் நூடுல்ஸ் ரெசிபி.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • టిఫిన్ వంటకములు
  • తమిళనాడు
  • ప్రధాన వంటకం
  • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கோதுமை மாவு 3/4 கப்
  2. எண்ணெய் 1 ஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு
  4. நூடுல்ஸ் செய்ய: எண்ணெய் 2 ஸ்பூன்
  5. பூண்டு 4 சிறிய பற்கள்
  6. இஞ்சி மிகச் சிறிய துண்டு
  7. பச்சை மிளகாய் 1
  8. வெங்காயம் 1
  9. காரட் 1
  10. தக்காளி சாஸ் 1 ஸ்பூன்
  11. சில்லி சாஸ் 1 ஸ்பூன்
  12. சப்பாத்தி 4
  13. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவுடன் 1 ஸ்பூன் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  2. பிசைந்தவுடன் எண்ணெய் தடவி விடவும்.பிசைந்த மாவை 20 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
  3. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  4. உருண்டைகளை சப்பாத்தி கட்டையில் தேய்த்து சப்பாத்தியாக தோசைக் கல்லில் போட்டு எடுக்கவும்.
  5. சப்பாத்திகளை சுருட்டி கத்தியை வைத்து மெல்லியதாக வெட்டிக் கொள்ளவும்.
  6. வெட்டிய சப்பாத்தி
  7. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  8. வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  9. நீளமாக நறுக்கிய காரட் சேர்த்து வதக்கவும்.உப்பு சேர்க்கவும்.
  10. காரட் வெந்ததும் தக்காளி சாஸ் சேர்த்து கிளறவும்
  11. சில்லி சாஸ் சேர்த்து கிளறவும்.
  12. வெட்டி வைத்த சப்பாத்தியை சேர்த்து நன்றாக கிளறவும்.
  13. சப்பாத்தியில் மசாலா ஏறும் வரை கிளறி இறக்கவும்.
  14. சுவையான சப்பாத்தி நூடுல்ஸ் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்