வீடு / சமையல் குறிப்பு / எலுமிச்சை சாதம் உருளைக்கிழங்கு வறுவல்

Photo of Lemon rice potato fry by Rachell Revathi Samuel at BetterButter
777
1
0.0(0)
0

எலுமிச்சை சாதம் உருளைக்கிழங்கு வறுவல்

Aug-28-2018
Rachell Revathi Samuel
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

எலுமிச்சை சாதம் உருளைக்கிழங்கு வறுவல் செய்முறை பற்றி

எளிமையாக செய்யக்கூடிய வெரைட்டி ரைஸ்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. எண்ணெய் 3 ஸ்பூன்
  2. கடுகு 1/2 ஸ்பூன்
  3. உளுத்தம்பருப்பு 1 ஸ்பூன்
  4. கடலை பருப்பு 1 ஸ்பூன்
  5. கருவேப்பிலை சிறிது
  6. மிளகாய் வற்றல் 1
  7. பச்சை மிளகாய் 2
  8. நிலக் கடலை 2 ஸ்பூன்
  9. முந்திரி பருப்பு 6
  10. மஞ்சள்தூள் 3/4 ஸ்பூன்
  11. எலுமிச்சம் பழம் 1
  12. உப்பு தேவையான அளவு
  13. உருளைக்கிழங்கு வறுவல்: எண்ணெய் 5 ஸ்பூன்
  14. கடுகு 1/2 ஸ்பூன்
  15. வெங்காயம் 1
  16. கருவேப்பிலை சிறிது
  17. உருளைக்கிழங்கு 2
  18. மிளகாய்த்தூள் 1 1/2 ஸ்பூன்
  19. கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  20. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்க்கவும்.
  2. கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
  3. கருவேப்பிலை மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.
  4. பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.பின் நிலக் கடலை மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து வதக்கவும்.
  5. பெருங்காயம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
  6. பிழிந்த எலுமிச்சை சாறு சேர்க்கவும்.உப்பு சேர்க்கவும்.
  7. சாதம் சேர்த்து நன்றாக கிளறவும்.அடுப்பை அணைத்து விடவும்.
  8. சாதம் சேர்த்து நன்றாக கிளறவும்.சுவையான எலுமிச்சை சாதம் தயார்.
  9. எலுமிச்சை சாதம்
  10. உருளைக்கிழங்கு வறுவல்: அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளித்து வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  11. வெங்காயம் வதங்கியதும் உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்.
  12. சில நிமிடங்கள் வதக்கிய பின் உப்பு சேர்க்கவும்.தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
  13. உருளைக்கிழங்கு வெந்ததும் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
  14. சுவையான உருளைக்கிழங்கு வறுவல் தயார்.
  15. எளிதாக செய்யக்கூடிய லன்ச் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்