வீடு / சமையல் குறிப்பு / சோயா பிரியாணி

Photo of Soya Biriyani by Rachell Revathi Samuel at BetterButter
1045
1
0.0(0)
0

சோயா பிரியாணி

Aug-28-2018
Rachell Revathi Samuel
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சோயா பிரியாணி செய்முறை பற்றி

மீல்மேக்கர் என்றும் அழைக்கப்படும் சோயா வைத்து செய்யப்படும் பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சோயா 1/4 கப்
  2. எண்ணெய் 2 ஸ்பூன்
  3. நெய் 2 ஸ்பூன்
  4. பட்டை 1
  5. கிராம்பு 1
  6. பிரியாணி இலை 1
  7. ஏலக்காய் 1
  8. வெங்காயம் 1
  9. கருவேப்பிலை சிறிது
  10. இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
  11. தக்காளி 1
  12. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  13. கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  14. அரிசி 1/2 கப்
  15. உப்பு தேவையான அளவு
  16. புதினா சிறிது
  17. கொத்தமல்லி தழை சிறிது

வழிமுறைகள்

  1. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி வைக்கவும்.உப்பு சேர்க்கவும்.
  2. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் சோயாவை சேர்க்கவும்.அடுப்பை அணைக்கவும்.சில நிமிடங்கள் சுடு தண்ணீரில் இருந்த பின் சோயாவில் உள்ள தண்ணீரை பிழிந்து எடுத்து கொள்ளவும்.
  3. அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பிரியாணி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்க்கவும்.
  4. சோம்பு சேர்க்கவும்.
  5. நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை சேர்க்கவும்.
  6. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  7. நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.தக்காளி வதங்கியதும் மிளகாய்த்தூள் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
  8. சோயாவை சேர்க்கவும்.
  9. நன்றாக வதக்கவும்.
  10. அரிசி மற்றும் 2 மடங்கு தண்ணீர் சேர்க்கவும்.
  11. தேவையான உப்பு சேர்க்கவும்.புதினா மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து குக்கரை மூடி வைத்து 2 விசில் விட்டு இறக்கவும்.
  12. சுவையான சோயா பிரியாணி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்