வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் குருமா அவரைக் காய் பொரியல் சாதம்

Photo of Vegetable gravy broad beans poriyal rice by Rachell Revathi Samuel at BetterButter
432
1
0.0(0)
0

வெஜிடபிள் குருமா அவரைக் காய் பொரியல் சாதம்

Aug-28-2018
Rachell Revathi Samuel
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் குருமா அவரைக் காய் பொரியல் சாதம் செய்முறை பற்றி

காரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு மற்றும் அவரைக் காய் போன்ற காய்கறிகள் நிறைந்த ஒரு மதிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. காரட் 1
  2. பீன்ஸ் 7-10
  3. உருளைக்கிழங்கு 1
  4. பச்சை பட்டாணி 1/4 கப்
  5. எண்ணெய் 1ஸ்பூன்
  6. பட்டை 1
  7. கிராம்பு 1
  8. ஏலக்காய் 1
  9. அன்னாசி பூ 1
  10. வறுத்து அரைக்க:சீரகம் 1/2 ஸ்பூன்
  11. சோம்பு 1/2 ஸ்பூன்
  12. வெங்காயம் 2
  13. தக்காளி 2
  14. தேங்காய் துருவல் 1/4 கப்
  15. தாளிக்க: எண்ணெய் 2 ஸ்பூன்
  16. கடுகு 1/2 ஸ்பூன்
  17. வெங்காயம் 1
  18. கருவேப்பிலை சிறிது
  19. இஞ்சி பூண்டு விழுது சிறிது
  20. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  21. கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  22. மல்லி தூள் 2 ஸ்பூன்
  23. சாதத்திற்கு அரிசி 1 கப்
  24. அவரைக் காய் பொரியல்: அவரைக் காய் 20-25
  25. எண்ணெய் 2 ஸ்பூன்
  26. கடுகு 1/4 ஸ்பூன்
  27. வெங்காயம் 1
  28. கருவேப்பிலை சிறிது
  29. மிளகாய் வற்றல் 2
  30. மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
  31. பட்டை தூள் 1/4 ஸ்பூன்
  32. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெஜிடபிள் குருமா: காய்கறிகளை நறுக்கி குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.
  2. அடுப்பில் வாணலியை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு சீரகம் சோம்பு சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. தக்காளி சேர்த்து வதக்கவும்.
  5. தக்காளி வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
  6. எல்லாம் வதங்கியதும் அடுப்பில் இருந்து இறக்கவும்.ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  7. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.பின் வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  8. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  9. மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலா சேர்க்கவும்
  10. வேகவைத்த காய்கறிகள் சேர்த்து நன்றாக கிளறவும்.பின் மல்லி தூள் சேர்த்து கிளறவும்.
  11. அரைத்த மசாலாவை சேர்க்கவும்.
  12. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதித்ததும் உப்பு சேர்த்து இறக்கவும்.
  13. அவரைக் காய் பொரியல்: அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு சேர்க்கவும்.
  14. கடுகு வெடித்ததும் வெங்காயம் கருவேப்பிலை மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.
  15. நறுக்கிய அவரைக் காய் சேர்க்கவும்.உப்பு சேர்க்கவும்.
  16. தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவும்.
  17. மஞ்சள்தூள் பட்டை தூள் சேர்த்து கிளறவும்.
  18. சுவையான ஆரோக்கியமான அவரைக் காய் பொரியல் தயார்.
  19. காய்கறிகள் நிறைந்த மதிய உணவு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்