வீடு / சமையல் குறிப்பு / வெஜ் சாண்ட்விச்

Photo of Veg sandwich by Rachell Revathi Samuel at BetterButter
397
1
0.0(0)
0

வெஜ் சாண்ட்விச்

Aug-28-2018
Rachell Revathi Samuel
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

வெஜ் சாண்ட்விச் செய்முறை பற்றி

காரட் பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து செய்யப்படும் சத்தான சாண்ட்விச்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பிரட் 4
  2. வெங்காயம் 1
  3. காரட் 1
  4. சிறிய பீட்ரூட் 1
  5. சிறிய உருளைக்கிழங்கு 1
  6. மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
  7. கரம் மசாலா 1/4 ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. தக்காளி சாஸ் 4 ஸ்பூன்
  10. பட்டர் 4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வேகவைத்து எடுக்கவும்.காரட் மற்றும் பீட்ரூட்டை துருவி கொள்ளவும்.வெங்காயத்தை வெட்டிக் கொள்ளவும்.
  2. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் காரட் மற்றும் பீட்ரூட்டை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  4. தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
  5. மிளகாய்த்தூள் கரம் மசாலா சேர்த்து கிளறவும்.
  6. 2 நிமிடங்கள் நன்றாக வதங்கியதும் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்க்கவும்.மசாலா ஏறியதும் அடுப்பை அணைத்து விடவும்.
  7. 2 பிரட்டில் தக்காளி சாஸ் தடவி வைக்கவும்.
  8. காய்கறிகளை ஒரு பிரட்டில் பரப்பி விடவும்.
  9. அடுத்த பிரட்டை வைத்து மூடவும்.இரண்டு புறமும் வெண்ணெய் தடவி வைக்கவும்.
  10. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து பிரட்டை வைக்கவும்.
  11. இரு புறமும் திருப்பி போட்டு வேகவிடவும்.பொன்னிறமானதும் எடுக்கவும்.
  12. சுவையான கலர்புல்லான வெஜ் பிரட் சான்ட்விச் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்