வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் ஸ்டப் சப்பாத்தி

Photo of Vegetable stuff chappathi by Deepa Srivatsan at BetterButter
234
0
0.0(0)
0

வெஜிடபிள் ஸ்டப் சப்பாத்தி

Aug-28-2018
Deepa Srivatsan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் ஸ்டப் சப்பாத்தி செய்முறை பற்றி

சப்பாத்தியில் stuff செய்து இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு 1 கப்
  2. பீன்ஸ் குடமிளகாய் கேரட் வெங்காயம் நறுக்கியது ஒரு கப்
  3. மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன்
  4. மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்
  5. கரம் மசாலா தூள் கால் டீஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு போட்டு நறுக்கிய காய்கறிகளை போடவும்
  2. மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வாணலியில் ஊற்றவும்
  3. 2 நிமிடம் கழித்து உப்பு காரப்பொடி கரம் மசாலாத்தூள் சேர்க்கவும்
  4. ஒரு கிளறு கிளறி மத்தால் காய்கறிகளை நன்றாக ஒன்று சேரும் வரை மசிக்கவும்
  5. காய்கறிகளுள் ஒன்று சேர்ந்தவுடன் அடுப்பை அணைத்து அதை ஆற விடவும்
  6. ஆறிய பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்
  7. சப்பாத்தி மாவை நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்
  8. சப்பாத்தியை நன்றாக வட்டமாக இட்டு அதன் மீது ஒரு உருண்டையை வைக்கவும்
  9. காய்கறியை முழு சப்பாத்திக்கும் நன்றாக பரவ விடவும்
  10. மற்றொரு சப்பாத்தி இட்டு அதன் மீது மூடி நன்றாக சிறிது தண்ணீர் தொட்டு ஒட்டவும்
  11. சப்பாத்தி கல்லை சூடாக்கி அதன்மீது போட்டு சிறிது நெய் ஊற்றி மிதமான தீயில் இரண்டு பக்கமும் வேக விட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்