வீடு / சமையல் குறிப்பு / புதிதாக அரைத்த மசாலாவைப் பயன்படுத்தி உருளைக்கிழங்கு வறுவல்

Photo of Potato Fry Using Freshly Ground Masala by Priya Satheesh at BetterButter
2537
30
0.0(0)
0

புதிதாக அரைத்த மசாலாவைப் பயன்படுத்தி உருளைக்கிழங்கு வறுவல்

Jun-17-2016
Priya Satheesh
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 6 உருளைக்கிழங்கு, 4 துண்டுகளாக நறுக்கப்பட்டது
  2. 1 வெங்காயம், நறுக்கப்பட்டது
  3. 1 தேக்கரண்டி மல்லி
  4. 1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
  5. 1/4 தேக்கரண்டி சீரகம்
  6. 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் துண்டுகள்
  7. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  8. 1 தேக்கரண்டி எண்ணெய்
  9. 1 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கப்பட்டது ( காரசாரமான உருளைக்கிழங்கு வறுவலுக்காக அளவை அதிரித்துக்கொள்ளவும்)
  10. 2 கொத்து கறிவேப்பிலை, பொடியாக நறுக்கப்பட்டது
  11. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. நறுக்கப்பட்ட உருளைக்கிழங்கை 10 நிமிடங்களுக்கு தண்ணீர் சேர்த்து மைக்ரோ ஓவனில் வைக்கவும்.
  2. உருளைக்கிழங்கு வெந்ததும், தண்ணீரை வடிக்கட்டி, தோலை உரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. மைக்ரோ ஓவனுக்குப் பதிலாக, நீங்கள் பிரஷர் குக்கர் முறை அல்லது திறந்த அடுப்பின் மீது சமைக்கும் முறையை உருளைக்கிழங்கு வேகவைக்கப் பயன்படுத்தலாம்.
  4. பெருஞ்சீரகம் சீரகத்தோடு மல்லியை வெறுமனே வறுத்துக்கொள்ளவும்.
  5. வறுத்ததும், குழவியால் அல்லது அம்மியில் பொடியாக அரைத்து, எடுத்து வைக்கவும்.
  6. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி, சிவப்பு மிளகாய்த் துண்டுகளைத் தொடர்ந்து மஞ்சள் மற்றும் நறுக்கப்பட்ட வெங்காயத்தைச் சேர்க்கவும்.
  7. வெங்காயம் பளபளப்பாகும்வரை வதக்கி அரைத்த மசாலா தூளைச் சேர்க்கவும்.
  8. வதக்கி வேகவைத்த உருளைக்கிழங்கை தேவையான அளவு உப்பு மற்றும் பொடியாக நறுக்கப்பட்டப் பச்சை மிளகாயோடு சேர்க்கவும்.
  9. நன்றாகக் கலக்கவும். அப்போதுதான் மசாலா உருளைக்கிழங்கின் மீது நன்றாகப் பரவியிருக்கும்.
  10. தண்ணீர் தெளித்து, மூடியால் மூடி வேகும் வரை சமைக்கவும்.
  11. வெந்ததும், பொடியாக நறுக்கப்பட்டக் கறிவேப்பிலையால் அலங்கரித்து சாம்பார் சாதம், ரச சாதம், தயிர் சாதத்தோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்