வீடு / சமையல் குறிப்பு / பீட்ருட் இலை, கேரட் சப்பாத்தி மற்றும் பட்டர் பீன்ஸ் சோயா மசால்

Photo of Beet Greens,Carrot Chappati with Butter beans soya gravy. by Jayanthy Asokan at BetterButter
573
0
0.0(0)
0

பீட்ருட் இலை, கேரட் சப்பாத்தி மற்றும் பட்டர் பீன்ஸ் சோயா மசால்

Aug-28-2018
Jayanthy Asokan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பீட்ருட் இலை, கேரட் சப்பாத்தி மற்றும் பட்டர் பீன்ஸ் சோயா மசால் செய்முறை பற்றி

பீட்ரூட் இலை தண்டு மற்றும் துருவிய கேரட் கொண்டு சப்பாத்தி செய்து அதற்கு பட்டர் பீன்ஸ் மற்றும் சோயா சங்ஸ் மசாலா செய்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டிபன் பாக்ஸ் கட்டி தரலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • பான் பிரை
  • சிம்மெரிங்
  • பிரெஷர் குக்
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு 2 கப்
  2. பீட்ரூட் இலைகள் மற்றும் அதன் த ண்டு 10
  3. கேரட் துருவியது 3
  4. வெங்காயம் 1
  5. எண்ணெய் வதக்க 1/2 மேஜைக்கரண்டி
  6. உப்பு தேவைக் கேற்ப
  7. பட்டர் பீன்ஸ் சோயா மசால் செய்ய
  8. பட்டர் பீன்ஸ் ப்ரெஸ் 1 கப்
  9. சோயா சன்க்ஸ் 1 கப்
  10. வெங்காயம் பொடியாக அரிந்தது 1
  11. தக்காளி பொடியாக அரிந்தது 2
  12. இஞ்சி பூண்டு விழுது ஒரு மேசைக்கரண்டி
  13. சோம்பு 1/2 தேக்கரண்டி
  14. மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
  15. சாம்பார் தூள் 2 தேக்கரண்டி
  16. எண்ணெய் 2 மேசைக்கரண்டி
  17. உப்பு தேவைக்கேற்ப
  18. மல்லித்தழை சிறிதளவு
  19. கறிவேப்பிலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு மித மான தீயில் வைக்கவும்.
  2. வெங்காயத்தையும் பீட்ரூட் இலைகளையும் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும் .கேரட்டை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்
  3. பொடியாக நறுக்கிய பீட்ரூட் இலைகளையும் ,வெங்காயம் மற்றும் துருவிய கேரட்டையும் வதக்கவும்
  4. நன்கு வதங்கிய உடன் ஆற விடவும்
  5. அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு,வதக்கிய பீட்ரூட் இலை கேரட், உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி பதர்த்திற்க்கு பிசைய வேண்டடும்.
  6. பிசைந்த பின் 10 நிமிடத்திற்கு மூடி வைக்க வேண்டும்
  7. பட்டர் பீன்ஸ் சோயா மசாலா செய்ய.
  8. பிரஷர் குக்கரில் பட்டர் பீன்ஸை சிறிது தண்ணீர் விட்டு 10 நிமிடங்கள் வேக வைக்கவும்
  9. வெந்த சோயாவை குளிர்ந்த நீரில் வைக்க வேண்டும்
  10. ஆரிய சோயாவை நன்கு ஈரம் போகும் வரை பிழிந்து தனியே வைக்க வேண்டும்
  11. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சோம்பை தாளிக்க வேண்டும்.
  12. பொரிந்த பின் நறுக்கிய வெங்காயத்தை வதக்க வேண்டும்.
  13. பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்
  14. பச்சை வாசனை போன பின் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்
  15. நன்கு வதங்கியதும் சாம்பார் பொடி உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
  16. வேகவைத்த பட்டர் பீன்ஸ் மற்றும் சோயாவை கலக்க வேண்டும்
  17. மல்லித்தழை கறிவேப்பிலை தூவி இறக்கி வைக்க வேண்டும்
  18. ஊறிய சப்பாத்தி மாவை சிறு சிறு உருண்டைகளாக வேண்டும்
  19. சிறிய சப்பாத்திகளாக தேய்க்க வேண்டும்
  20. தவாவில் சிறிது எண்ணெய் விட்டு சப்பாத்தி சுட வேண்டும்
  21. பீட்ரூட் இலை கேரட் சப்பாத்தி தயார்
  22. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான லன்ச் பாக்ஸ் மெனு.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்