வீடு / சமையல் குறிப்பு / ரவா பாசிப்பருப்பு கிச்சடி

Photo of Rava Moongdal Kichadi by Sowmya Sundar at BetterButter
189
1
0.0(0)
0

ரவா பாசிப்பருப்பு கிச்சடி

Aug-28-2018
Sowmya Sundar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ரவா பாசிப்பருப்பு கிச்சடி செய்முறை பற்றி

வெறும் ரவா உப்புமா செய்வதற்கு பதிலாக அதில் பாசி பருப்பு வேகவைத்து சேர்த்து செய்யும் சுவையான கிச்சடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாம்பே ரவை ஒரு கப்
  2. பாசிப்பருப்பு கால் கப்
  3. தண்ணீர் 2 1/2 கப்
  4. உப்பு தேவையான அளவு
  5. பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்
  6. பச்சை மிளகாய் 3
  7. இஞ்சி ஒரு துண்டு
  8. கறிவேப்பிலை,மல்லி சிறிதளவு
  9. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  10. கடுகு ,முந்திரி தலா ஒரு டீஸ்பூன்
  11. உளுத்தம்பருப்பு ,கடலைப்பருப்பு தலா ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் ரவையை லேசாக வறுத்துக் எடுத்து கொள்ளவும்
  2. பாசிப்பருப்பை தனியாக குழைய வேக வைத்துக் கொள்ளவும்
  3. அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு ,முந்திரிப் பருப்பு , கடலைப் பருப்பு , சேர்த்து வறுக்கவும்
  4. பின் கருவேப்பிலை மல்லி , பச்சை மிளகாய் ,இஞ்சி ,உப்பு, பெருங்காயம் சேர்த்து வதக்கி தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்
  5. நீர் கொதித்ததும் வறுத்த ரவை மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்
  6. ரவா பாசிப்பருப்பு கிச்சடி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்