வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டன்ட் அவல் இட்லி

Photo of Instant Poha idly by Krishnasamy Vidya Valli at BetterButter
356
1
0.0(0)
0

இன்ஸ்டன்ட் அவல் இட்லி

Aug-28-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டன்ட் அவல் இட்லி செய்முறை பற்றி

காலைநேர பரபரப்பில் டிபன்பாக்ஸ் கட்டிக்கொடுக்க ஏதுவான ரெசிபி இது. இட்லி மாவு இல்லாத நேரத்தில் கை கொடுக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சிவப்பு அவல் 1/4 கப்
  2. தயிர் 2 மேஜைக்கரண்டி
  3. உப்பு 1/4 தேக்கரண்டி
  4. கொத்தமல்லி இலை சிறிது
  5. தாளிக்க
  6. எண்ணெய் 1/2 தேக்கரண்டி
  7. கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு-தலா 1/4 தேக்கரண்டி
  8. கருவேப்பிலை 1 ஆர்க்கு
  9. பெருங்காயம் 4 சிட்டிகை
  10. பட்டாணி பஜ்ஜி மிளகாய் மற்றும் விருப்பமான காய்கள் பொடியாக நறுக்கியது -1/8 கப்

வழிமுறைகள்

  1. அவலை வெறும் கடாயில் வறுத்து திரிக்கவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வதக்கவும்
  3. எல்லாம் ஒன்றாக தண்ணீரும் சேர்த்து கலந்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்
  4. இட்லி தட்டில் பத்து நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்
  5. தக்காளி/மாங்காய் தொக்குடன் டிபன்பாக்ஸ் பேக் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்