வீடு / சமையல் குறிப்பு / கோபி ஃப்ரைடு ரைஸ்

Photo of gobi fried rice by Jayasakthi Ekambaram at BetterButter
294
0
0.0(0)
0

கோபி ஃப்ரைடு ரைஸ்

Aug-28-2018
Jayasakthi Ekambaram
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கோபி ஃப்ரைடு ரைஸ் செய்முறை பற்றி

காலிஃப்ளவரை வறுத்து சாதத்தில் போட்டுச் செய்யும் பிரைட் ரைஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. காலிஃப்ளவர் சிறியது 1
  2. கேரட் ஒன்று
  3. கோஸ் கால் கிலோ
  4. மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  5. கரம் மசாலா தூள் அரை ஸ்பூன்
  6. மிளகுத்தூள் அரைஸ்பூன்
  7. உப்புத்தூள் ஒரு ஸ்பூன்
  8. டொமேட்டோ சாஸ் 2 ஸ்பூன்
  9. சோயா சாஸ் 2 ஸ்பூன்
  10. வெங்காயத்தாள் ஒரு கட்டு
  11. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  12. எண்ணெய் அரை லிட்டர்
  13. கான்பிளவர் மாவு 2ஸ்பூன்
  14. மைதா மாவு 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. காலிஃப்ளவர் பூக்களை வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்
  2. அதனை நன்றாக கழுவி தண்ணீரை வடிகட்ட வேண்டும்
  3. கார்ன்ஃப்ளவர் மைதா மாவு இஞ்சி பூண்டு விழுது உப்பு எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து காலிஃப்ளவரின் மேல் தூவவும்
  4. மசாலா கலந்த காலிஃப்ளவரை மூடி ஊற வைக்கவும்
  5. அது ஊறும் நேரத்தில் வெங்காயத்தாள் கோஸ் கேரட் இவற்றை பொடியாக சீவிக் கொள்ளவும்
  6. நன்றாக ஊறிய காலிஃபிளவரை எண்ணெயில் போட்டு மொறு மொறுப்பாக பொரித்து எடுக்கவும்
  7. வாணலியில் உள்ள எண்ணெய்யை வடிகட்டிய பிறகு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்
  8. பிறகு கேரட் கோஸ் இவற்றை போட்டு வதக்கவும்
  9. காய்கள் முக்கால் பதம் வெந்த பிறகு மசாலா பொடியை தூவவும்
  10. அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு வறுத்த காலிஃப்ளவரை போடவும்
  11. உப்புத்தூள் சேர்த்த பிறகு சோயா சாஸ் டொமேட்டோ சாஸ் சேர்த்து வதக்கவும்
  12. ஆற வைத்த சாதத்தை இதன் மேல் போட்டு நன்றாக கிளறவும்
  13. வெங்காயத்தாள் பொடியாக அரிந்து மேலே தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்