வீடு / சமையல் குறிப்பு / உடனடி பொரி உப்புமா

Photo of Quick pori upma by Deepa Srivatsan at BetterButter
354
0
0.0(0)
0

உடனடி பொரி உப்புமா

Aug-28-2018
Deepa Srivatsan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உடனடி பொரி உப்புமா செய்முறை பற்றி

காய்கறிகள் போட்டு ஐந்து நிமிடத்தில் எளிதாக செய்யக்கூடிய ஈஸியான ரெசிபி குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பொரி 2 கப்
  2. பீன்ஸ் கேரட் வெங்காயம் குடை மிளகாய் நறுக்கியது ஒரு கப்
  3. பச்சை மிளகாய் 2
  4. மஞ்சள் தூள் சிறிதளவு
  5. பெருங்காயம் சிறிதளவு
  6. கருவேப்பிலை இரண்டு ஆர்க்
  7. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  8. கடுகு அரை டீஸ்பூன்
  9. உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்
  10. கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்
  11. எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு பச்சை மிளகாய் கறிவேப்பிலை மற்றும் பச்சை காய்கறிகளை போடவும்
  2. சிறிது மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து மூடவும்
  3. 2 கப் பொரியை நன்றாக தண்ணீரில் 15 நொடிகள் போட்டு பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
  4. காய்கறி நன்றாக வெந்ததும் அதனுடன் பொரியைப் போட்டு சிறிது உப்பு சேர்க்கவும்
  5. 15 நொடிகள் நன்றாக கிளறி இறக்கவும் இறக்கியவுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்