வீடு / சமையல் குறிப்பு / பால் சப்பாத்தி மற்றும் பாசிப்பருப்பு தால்

Photo of Milk Chapathi and Moong dal by Sowmya Sundar at BetterButter
992
0
0.0(0)
0

பால் சப்பாத்தி மற்றும் பாசிப்பருப்பு தால்

Aug-28-2018
Sowmya Sundar
1800 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பால் சப்பாத்தி மற்றும் பாசிப்பருப்பு தால் செய்முறை பற்றி

கோதுமைமாவில் பால் சேர்த்து செய்த மிருதுவான சப்பாத்தி- தொட்டுக்கொள்ள பாசிப்பருப்பு தால்.பலமணி நேரம் சாப்ட்டாக இருப்பதால் டிபன் பாக்சில் பாக் செய்ய ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • பான் பிரை
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் சப்பாத்தி செய்ய
  2. கோதுமை மாவு 2 கப்
  3. பால் 3/4 கப்
  4. உப்பு சிறிதளவு
  5. எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  6. தால் செய்வதற்கு
  7. பாசிப்பருப்பு அரை கப்
  8. வெங்காயம் ஒன்று
  9. குடைமிளகாய் ஒன்று
  10. தக்காளி-2
  11. பச்சை மிளகாய் 2
  12. இஞ்சி ஒரு துண்டு
  13. கறிவேப்பிலை மல்லி சிறிது
  14. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  15. சீரகம் கடுகு தலா ஒரு டீஸ்பூன்
  16. மிளகாய் தூள் அரை டீஸ்பூன்
  17. மல்லி தூள் அரை டீஸ்பூன்
  18. உப்பு தேவையான அளவு
  19. எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சப்பாதி செய்வதற்கு கோதுமை மாவு, உப்பு , பால் மற்றும் எண்ணெய் சேர்த்து மிருதுவாகப் பிசைந்து கொள்ளவும்.அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. மாவை உருண்டைகளாக்கி சப்பாத்திகளாகத் தேய்த்துக் கொள்ளவும்
  3. தவா காய்ந்ததும் ஒவ்வொரு சப்பாத்தியாக போட்டு எண்ணெய் விட்டு நன்றாக வேக வைத்து எடுக்கவும்.
  4. டால் செய்வதற்கு முதலில் பாசிப்பருப்பை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், கடுகு, கருவேப்பிலை தாளித்து வெங்காயம் ,குடமிளகாய், தக்காளி ,பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்
  6. பின் அதனுடன் கொடுத்துள்ள பொடிகள் அனைத்தும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
  7. வதங்கியதும் வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்
  8. எலுமிச்சை சாறு சேர்த்து மல்லித்தழை தூவி இறக்கவும்
  9. மிருதுவான பால் சப்பாத்தி மற்றும் தால் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்