வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் கொத்து சப்பாத்தி

Photo of Panneer Kothu Chappathi by mano langra at BetterButter
190
1
0.0(0)
0

பன்னீர் கொத்து சப்பாத்தி

Aug-28-2018
mano langra
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் கொத்து சப்பாத்தி செய்முறை பற்றி

எளிமையான முறையில் சுவையானா காலை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சப்பாத்தி சிறு துண்டுகளாக வெட்டியது 1கப்
  2. பன்னீர் சிறு துண்டுகளாக நறுக்கியது 1 கப்
  3. வெங்காயம் நறுக்கியது 1 கப்
  4. பச்சை மிளகாய் நறுக்கியது 2
  5. குடை மிககாய் நறுக்கியது 1/2கப்
  6. தக்காளி நறுக்கியது 1 கப்
  7. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  8. கறிவேப்பிலை கொத்தமல்லி இலை நறுக்கியது சிறிதளவு
  9. மஞ்சள் பொடி 1/4 டீஸ்பூன்
  10. மிளகாய் போடி 1/2டீஸ்பூன்
  11. கரம் மசாலா 1/4டீஸ்பூன்
  12. கடுகு பொறிக்க 1/4டீஸ்பூன்
  13. கடலை பருப்பு 1/4டீஸ்பூன்
  14. தக்காளி சாஸ் 2 டீஸ்பூன்
  15. உப்பு தேவைக்கு
  16. சர்க்கரை சிறிதளவு
  17. எண்ணெய் 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெயை காயவைத்து கடுகு கடலை பருப்பு சேர்த்து பொரிக்கவும்
  2. நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் 1 நிமிடம் கழித்து நறுக்கிய வெங்காயம்,கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும் பொன்னிறம் ஆகும் வரை
  3. வெங்காயம் வதங்கியதும் துண்டுகளாக நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து வதக்கவும் 3 நிமிடம்
  4. நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு இஞ்ஜி பூண்டு விழுது சேர்த்து கலக்கவும்
  5. நன்கு வதங்கியதும் மஞ்சள் , மிளகாய் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து கலக்கவும்.
  6. 1/2கப் தண்ணீர் விட்டு 3 நிமிடம் வேகா விடவும். வெட்டி வைத்த பன்னீர் சேர்த்து நன்கு கலக்கி வெக விடவும்
  7. தண்ணீர் சிறிது வற்றியதும் வெட்டி வைத்த சப்பாத்தி சேர்த்து நன்கு கிளிரவும்
  8. உப்பு மற்றும் சர்க்கரை மற்றும் சிறிது தண்ணீர் விட்டு நன்கு வதக்கவும்
  9. கடைசியாக தக்காளி சாஸ் சேர்த்து கிளறி வெங்காயம் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்