Photo of Ghee rice by Rachell Revathi Samuel at BetterButter
439
1
0.0(0)
0

நெய் சாதம்

Aug-28-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

நெய் சாதம் செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி உண்ணும் நெய் சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. நெய் 5 ஸ்பூன்
  2. வெண்ணெய் 1 ஸ்பூன்
  3. பட்டை 1
  4. பிரியாணி இலை 1
  5. கிராம்பு 1
  6. ஏலக்காய் 1
  7. வெங்காயம் 1
  8. அரிசி 1/2 கப்
  9. உப்பு தேவையான அளவு
  10. அலங்கரிக்க: நெய் 1 ஸ்பூன்
  11. முந்திரி 10-15
  12. வெங்காயம் 1

வழிமுறைகள்

  1. அரிசியை 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  2. அடுப்பில் குக்கரை வைத்து நெய் மற்றும் வெண்ணெய் சேர்க்கவும்.
  3. பிரியாணி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.
  4. நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். கண்ணாடி போல் வதங்கியதும் அரிசி சேர்த்து வதக்கவும்.
  5. அரிசிக்கு தேவையான தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.உப்பு சேர்க்கவும்.குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.
  6. குக்கரில் கேஸ் ரிலீஸ் ஆனதும் திறக்கவும்.
  7. ஒரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரி சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  8. வறுத்த முந்திரியை சாதத்தில் சேர்க்கவும்.
  9. முந்திரி வறுத்த வாணலியில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  10. வெங்காயத்தை நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  11. வதக்கிய வெங்காயத்தை நெய்யுடன் சாதத்தில் சேர்க்கவும்.
  12. நன்றாக கிளறி விடவும்.
  13. சுவையான நெய் சாதம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்