வீடு / சமையல் குறிப்பு / ராஜஸ்தானி கோபா ரொட்டி

Photo of Rajasthani Khoba Roti by Sowmya Sundar at BetterButter
457
0
0.0(0)
0

ராஜஸ்தானி கோபா ரொட்டி

Aug-28-2018
Sowmya Sundar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ராஜஸ்தானி கோபா ரொட்டி செய்முறை பற்றி

ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பரிய ரொட்டி வகை.மாவை தடிமனாக இட்டு அதில் கையால் குழிகள் போன்று டிசைன் செய்து தந்தூரி அடுப்பில் செய்வார்கள். நான் சிற்சில மாற்றங்களுடன் தவாவில் செய்துள்ளேன்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • ராஜஸ்தான்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு 1 கப்
  2. நெய் -2 டேபிள் ஸ்பூன் + வாட்ட
  3. உப்பு சிறிது
  4. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு உப்பு , இரண்டு டேபிள்ஸ்பூன் நெய் மற்றும் தண்ணீர் சேர்த்து சிறிது கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  2. மாவை பெரிய உருண்டைகளாக ஆக்கி சிறிது தடிமனாக தேய்க்கவும். அதில் ஒரு பக்கம் கத்தியால் ஆங்காங்கே கோடு போடவும்
  3. மற்றொரு பக்கம் திருப்பி கைகளால் மாவில் அடுத்தடுத்து அழுத்தி கொள்ளவும். நான் புதிய நகவெட்டியை கொண்டு அழுத்தி டிசைன் செய்துள்ளேன்.
  4. தவா சூடானதும் ரொட்டியை அதில் போட்டு சிம்மில் வைத்து நெய் விட்டு நன்றாக வேக வைத்து எடுக்கவும்.தணலில் நேரடியாகவும் வாட்டலாம்.
  5. ராஜஸ்தானி கோபா ரொட்டி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்