வீடு / சமையல் குறிப்பு / அவல் பனீர் புருஜி

Photo of Poha paneer buruji by Krishnasamy Vidya Valli at BetterButter
271
0
0.0(0)
0

அவல் பனீர் புருஜி

Aug-28-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

அவல் பனீர் புருஜி செய்முறை பற்றி

ஆரோக்கியமான எளிதில் தயார் செய்யும் டிபன் பாக்ஸ் ரெசிபி இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. அவல் கால் கப்
  2. பனீர் துருவல் கால் கப்
  3. வெங்காயம் ஒன்று
  4. தக்காளி ஒன்று
  5. கொத்தமல்லி இலை சிறிது
  6. உப்பு 1/2 தேக்கரண்டி
  7. ஆம்சூர் பொடி காஷ்மீரி சில்லி பவுடர் தனியா பொடி சீரகப் பொடி கரம் மசாலா பொடி மஞ்சள் பொடி தலா கால் தேக்கரண்டி
  8. தாளிக்க தேவையானவை
  9. எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  10. ஏலக்காய் கிராம்பு தலா 2
  11. பட்டை ஒரு சிறிய துண்டு
  12. இஞ்சி பூண்டு விழுது அரை தேக்கரண்டி
  13. சீரகம் அரை தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. லேஸ் அவலாக இருந்தால் களைந்து அப்படியே வைக்கவும் கெட்டி அவலாக இருந்தால் பத்து நிமிடம் ஊற வைக்கவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து வதக்கவும்
  5. அவல் மற்றும் பனீர் துருவல் சேர்த்துக் கிளறவும்
  6. கொத்தமல்லி தூவி டிபன்பாக்ஸ் பேக்செய்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்