வீடு / சமையல் குறிப்பு / பேன்டோ மதிய உணவு டப்பா

Photo of Bento Lunch box by Vins Raj at BetterButter
1023
0
0.0(0)
0

பேன்டோ மதிய உணவு டப்பா

Aug-28-2018
Vins Raj
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பேன்டோ மதிய உணவு டப்பா செய்முறை பற்றி

வேலைக்கு எடுத்து செல்ல கலவையான சுவைமிக்க மதிய உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கீன்வா புலாவ்: 3/4 கப் கீன்வா
  2. 2/3 கப் நறுக்கிய கேரட், பீன்ஸ் மற்றும் பச்சை பட்டாணியம் சோளமும்
  3. 1 நறுக்கிய வெங்காயம்
  4. 1/2 தே.க. . மிளகாய் தூள்
  5. 1 தே.க. கொத்தமல்லி தூள்
  6. 1/4 தே.க. மஞ்சள் தூள்
  7. 1/4 தே.க. சோம்பு தூள்
  8. 1/4 தே.க கரம் மசாலா தூள்
  9. 1 கிராம்பு
  10. 1" பட்டை
  11. 1 கருப்பு ஏலக்காய்
  12. 1 அன்னாசி மொக்கு
  13. 1 பிரியாணி இலை
  14. 1 மே க எண்ணெய்
  15. 2 பல் பூண்டு சிறிதாக நறுக்கியது
  16. 1 கைப்பிடி புதினா தழை
  17. 1 கைப்பிடி நறுக்கிய கொத்தமல்லி தழை
  18. கேரட் ஹல்வா : 3/4 கப் துருவிய கேரட்
  19. 1/4 கப் தேங்காய் சர்க்கரை
  20. 1/4 தே.க. ஏலக்காய் பொடி
  21. 2.5 மே. க. பால் பவுடர்
  22. 2 மே. க. நெய்
  23. 1 மே க உலர்ந்த தேங்காய் துருவல்
  24. தயிர் பச்சடி 3/4 கப் நறுக்கிய பச்சை, சிகப்பு மற்றும் மஞ்சள் குடைமிளகாய்கள்
  25. 1/2 கப் தயிர்
  26. 1/4 தே. க. கடுகு
  27. 1/4 தே. க. சீரகம்
  28. 1/4 தே. க. பெருங்காய தூள்
  29. 1 தே க எண்ணெய்
  30. சோயா வறுவல் : 3/4 கப் சோயா உருண்டைகள்
  31. 1 சிறிய நறுக்கிய வெங்காயம்
  32. 1" பட்டை
  33. 1/4 தே. க. சோம்பு தூள்
  34. 1/4 தே. க. மிளகாய் தூள்
  35. 1/4 தே.க மஞ்சள் தூள்
  36. 1/4 கப் தேங்காய் பால்
  37. 1 ஆப்பிள்

வழிமுறைகள்

  1. கீன்வா புலாவ் : பிரஷர் குக்கரில் எண்ணையை விட்டு, பட்டை, கிராம்பு, கருப்பு ஏலக்காய் , அன்னாசி மொக்கு பிரியாணி இல்லை போட்டு தாளித்து , பின் பூண்டை சேர்த்து 1 நிமிடம் வதக்கி பின்னர் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  2. பின்னர் காய்கறிகளை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின்னர் மஞ்சள் பொடி , கொத்தமல்லி பொடி, மிளகாய் தூள், சோம்பு தூள் மற்றும் கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து 2 மேஜை கரண்டி நீர் விட்டு வதக்கவும்.
  3. பின்னர் 1,5 கப் தண்ணீர் விட்டு கொதி வந்தவுடன் கின்வாவை, கொத்தமல்லி தழை, புதினா தழை சேர்த்து 3 விசில் வைத்தவுடன் இறக்கி விடவும்.
  4. கேரட் ஹல்வா ..பிரஷர் குக்கரில் நெய்யை சூடாக்கி துருவிய கேரட் சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும். பின்னர் தேங்காய் சக்கரை, ஏலக்காய் பொடி, பால் பவுடர் சேர்த்து நன்றாக கிளறி குக்கர் மூடியில் வெயிட் போட்டு மூடவும். சரியாக 4 நிமிடங்கள் கழித்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
  5. தானாக பிரஷர் குறைந்தவுடன் குக்கர் மூடி திறந்து சூடு ஆரின் பின்பு கேரட் ஹல்வாவை சிறிய உருண்டைகளாக உருட்டி உலர்ந்த தேங்காய் துருவலில் பிரட்டவும்
  6. தயிர் பச்சடி: ஒரு கடையில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, சீரகம், பெருங்காயம் சேர்த்து, கடுகு பொரிந்தவுடன் குடைமிளகைகளை சேர்த்து 2 நிமிடம் வதக்கி தனியே எடுத்து கொள்ளவும். சூடு ஆறின பின்பு தயிருடன் உப்பு கலந்து கொள்ளவும்
  7. சோயா வறுவல்: சோயா உருண்டைகளை கொதி நீரில் 3 நிமிடங்கள் ஊற விட்டு கழுவி வைத்துக்கொள்ளவும்
  8. கடையில் எண்ணெய் சூடாக்கி அதில் பட்டை சேர்த்து பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  9. சோம்பு தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் உப்பு மற்றும் 2 மேஜை கரண்டி தண்ணீர் விட்டு வதக்கவும். பின்னர் சோயா உருண்டைகளை சேர்த்து கிளறவும்.
  10. இப்போது தேங்காய் பாலை ஊற்றி நன்றாக கிளறி, மூடி போட்டு 3 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வேக விடவும். வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்
  11. ஆப்பிள் பழத்தை கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி தண்ணீரில் மூக்கி எடுத்து, துணி கொண்டு துடைத்து டிபன் பாக்ஸில் வைக்கவும்.
  12. சமைத்து முடித்தவுடன் டப்பாவில் வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்