வீடு / சமையல் குறிப்பு / 6 நாளைக்கு ஹெல்த்தி டிபன் பாக்ஸ் டிபரென்ட் ரெஸிபி:- மாதுளை சாதம், ஓமம் சாதம், அவரைக்காய் பாராத்தா,இஞ்சி சாதம், பீட்ரூட் புலாவ், துளசி ரசம்

Photo of 6 days tiffin box healthydifferent receipes by poorani Kasiraj at BetterButter
660
1
0.0(0)
0

6 நாளைக்கு ஹெல்த்தி டிபன் பாக்ஸ் டிபரென்ட் ரெஸிபி:- மாதுளை சாதம், ஓமம் சாதம், அவரைக்காய் பாராத்தா,இஞ்சி சாதம், பீட்ரூட் புலாவ், துளசி ரசம்

Aug-28-2018
poorani Kasiraj
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

6 நாளைக்கு ஹெல்த்தி டிபன் பாக்ஸ் டிபரென்ட் ரெஸிபி:- மாதுளை சாதம், ஓமம் சாதம், அவரைக்காய் பாராத்தா,இஞ்சி சாதம், பீட்ரூட் புலாவ், துளசி ரசம் செய்முறை பற்றி

6 நாளைக்கு டிபன் பாக்ஸ் டிபரென்ட் ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மாதுளை சாதத்திற்கு தேவையான பொருட்கள்
  2. மாதுளை துகள்கள்
  3. சாதம் ஒரு கப்
  4. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  5. பட்டை ஒன்று
  6. கிராம்பு-2
  7. அன்னாசி பூ 1
  8. பிரிஞ்சி இலை ஒன்று
  9. ஒரு ஸ்பூன்
  10. சீரகம் சிறிது
  11. உப்பு
  12. ஓமம் சாதம்
  13. ஓமம் ஒரு ஸ்பூன்
  14. சாதம் ஒரு கப்
  15. உப்பு
  16. வெங்காயம் ஒன்று
  17. கடலைப்பருப்பு 1 ஸ்பூன்
  18. வேர்கடலை ஒரு ஸ்பூன்
  19. கடுகு
  20. கருவேப்பிலை ஒரு கொத்து
  21. இஞ்சி சாதம் செய்வதற்கு
  22. இஞ்சி பெரிய துண்டு
  23. சாதம் ஒரு கப்
  24. உப்பு
  25. கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன்
  26. மஞ்சத்தூள்
  27. பெருங்காயம்
  28. வேர்கடலை ஒரு ஸ்பூன்
  29. வத்தல் 2
  30. கருவேப்பிலை ஒரு கொத்து
  31. அவரக்காய் சப்பாத்தி செய்வதற்கு
  32. அவரக்காய் 5
  33. கோதுமை மாவு 3 ஸ்பூன்
  34. ராகி மாவு ஒரு ஸ்பூன்
  35. உப்பு
  36. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  37. வெங்காயம் பாதி
  38. எண்ணெய் சிறிது
  39. பீட்ரூட் பட்டாணி புலாவ்
  40. பட்டாணி 1/4கப்
  41. பீட்ரூட் ஒன்று
  42. அரிசி ஒரு கப்
  43. உப்பு தேவையான அளவு
  44. அன்னாசி பூ 1
  45. கரம் மசாலா 1 ஸ்பூன்
  46. பட்டை ஒன்று
  47. கிராம்பு-2
  48. பிரிஞ்சி இலை ஒன்று
  49. கொத்தமல்லி புதினா கால் கப்
  50. நெய் 2 ஸ்பூன்
  51. துளசி ரசம்
  52. துளசி கால் கப்
  53. புளி சிறிய நெல்லிக்காய் அளவிற்கு
  54. தக்காளி-2
  55. சீரகம் ஒரு ஸ்பூன்
  56. மிளகு ஒரு ஸ்பூன்
  57. வெந்தயம் ஒரு ஸ்பூன்
  58. வத்தல் 2
  59. கடுகு சிறிது
  60. கருவேப்பிலை கொத்தமல்லி
  61. துவரம் பருப்பு ஒரு ஸ்பூன்
  62. மல்லி ஒரு ஸ்பூன்
  63. உப்பு

வழிமுறைகள்

  1. மாதுளை சாதம் செய்வதற்கு
  2. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு
  3. முந்திரிப்பருப்பை வறுத்து கொள்ளவும்
  4. அதே கடாய சீரகம் அண்ணாச்சி பூ பட்டை கிராம்பு பிரியாணிஇலை சேர்த்து வதக்கவும்
  5. மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்
  6. மாதுளை துகள்களை கைகளால் பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் சாறு எடுத்து ஊற்றவும்
  7. சாதத்தை போட்டு கிளறவும்
  8. மாதுளை போட்டு நன்கு கிளறவும்
  9. மாதுளை சாதம் ரெடி
  10. ஓமம் சாதம் செய்வதற்கு
  11. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து
  12. உளுந்தம்பருப்பு வேர்க்கடலை கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  13. வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்
  14. ஓமம் சேர்க்கவும்
  15. சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும்
  16. ஓமம் சாதம் ரெடி
  17. இஞ்சி சாதம் செய்வதற்கு
  18. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு உளுந்து, கடலைப்பருப்பு, வேர்க்கடலை போடவும்
  19. வறுபட்டவுடன் வத்தல் கருவேப்பில்லை மஞ்சள்தூள் காயம் இஞ்சி துருவியது சேர்க்கவும்.
  20. நன்கு வதங்கிய வுடன் சாதம் சேர்த்து கிளறவும்
  21. இஞ்சி சாதம் ரெடி
  22. அவரைக்காய் பராத்தா செய்வதற்கு
  23. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம் அவரைக்காய் சேர்த்து வதக்கவும்
  24. உப்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  25. சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும்
  26. அவரைக்காய் வெந்தவுடன் நன்கு ஆறவிட்டு கோதுமை மாவு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிணைத்து சப்பாத்தியாக தேய்த்து தோசை கல்சுடனவுடன் போடவும்
  27. அவரைக்காய் பராத்தா ரெடி
  28. குக்கர் ல் நெய் விட்டு அண்ணாச்சி பூ பட்டை கிரஃம்பு பிரியாணிஇலை சோம்பு போட்டு வதக்கவும்
  29. வெங்காயம் போட்டு வதக்கவும் பட்டாணி பீட்ரூட் வதக்கவும்
  30. தக்காளி சேர்த்து வதக்கவும்
  31. கரம் மசாலா தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  32. உப்பு சேர்க்கவும் அரிசி சேர்க்கவும் கொத்தமல்லி புதினா சேர்க்கவும்
  33. தேவையான தண்ணீர் சேர்க்கவும்
  34. கொதித்து தண்ணீர் வற்றியதும் குக்கர் ஐ முடி 7 நிமிடம் சிம் ல் வைக்கவும்
  35. பீட்ரூட் புலாவ் ரெடி
  36. துளசி ரசம்
  37. ஒரு கடாயில் துவரம் பருப்பு மல்லி சீரகம் மிளகு வருது கொள்ளவும்
  38. பின்னர் மிக்ஸி ஜாரில் போடி செய்யவும்
  39. தக்காளி அரைத்து கொள்ளவும்பூண்டு எடுத்து கொள்ளவும்.
  40. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் வத்தல் சீரகம் கருவேப்பில்லை சேர்க்கவும்
  41. ரசப்பொடி தக்காளி சேர்க்கவும்.துளசி பொடியாக அறிந்து மிக்ஸில் ஒரு சுற்று சுற்றி போடவும் புலி கரைசல் ஊற்றவும்
  42. ஒரு கொத்தி வந்தவுடன் மல்லித்தழை சேர்த்து இறக்கவும்
  43. துளசிரசம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்