வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் தோசை ரோல்

Photo of Vegetable dosai roll by Krishnasamy Vidya Valli at BetterButter
84
0
0(0)
0

வெஜிடபிள் தோசை ரோல்

Aug-28-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் தோசை ரோல் செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பும் டிபன் பாக்ஸ் ரெசிப்பி இது

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • కలయిక
  • అల్పాహారం మరియు బ్రంచ్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பொடியாக நறுக்கிய காய்கறிகள் 11/2 கப்
  2. தோசை மாவு 6 குழம்பு கரண்டி
  3. உப்பு முக்கால் தேக்கரண்டி
  4. காரப்பொடி கரம் மசாலா தலா அரை தேக்கரண்டி
  5. மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
  6. கடலை மாவு ஒரு மேசைக்கரண்டி
  7. கொத்தமல்லி இலை சிறிது
  8. தாளிக்க தேவையானவை
  9. எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  10. கடுகு உளுத்தம்பருப்பு தலா அரை தேக்கரண்டி
  11. பெருங்காயம் கால் தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடாயில் தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து காய்கறி சேர்த்து வதக்கவும்
  2. உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து கிளறவும்
  3. கடலை மாவை தண்ணீர்விட்டு கரைத்து சேர்க்கவும்
  4. சுருளக் கிளறி கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்
  5. தோசைக்கல்லில் ஒரு கரண்டி மாவை விட்டு தோசை வார்க்கவும்
  6. தோசை வெந்ததும் அதில் செய்து வைத்த மசாலாவை வைத்து ரோல் செய்து கொள்ளவும்
  7. தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை அப்படியே டிபன் பாக்ஸ் பேக் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்