வீடு / சமையல் குறிப்பு / ரெட் சாஸ் பாஸ்தா/மக்ரூணி

Photo of Red Sauce Pasta by Munsila Fathima at BetterButter
347
0
0.0(0)
0

ரெட் சாஸ் பாஸ்தா/மக்ரூணி

Aug-28-2018
Munsila Fathima
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ரெட் சாஸ் பாஸ்தா/மக்ரூணி செய்முறை பற்றி

ரெட் சாஸ் பாஸ்தா என்பது ஒன்றுமில்லை தக்காளியை வேக வைத்து அரைத்து அதனுடன் சில ஹெர்ப்ஸ் சேர்த்து செய்வது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • இத்தாலிய
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மக்ரோனி கால் கிலோ
  2. தக்காளி நான்கு
  3. காஷ்மீரி சில்லி 3
  4. இஞ்சி பூண்டு விழுது கால் தேக்கரண்டி
  5. வெங்காயம் ஒன்று
  6. உப்பு தேவைக்கு
  7. காஷ்மீரி சில்லி தூள் 1/4 தேக்கரண்டி
  8. மிக்ஸ்ட் ஹெர்ப் கால் தேக்கரண்டி
  9. மிளகுத் தூள் கால் தேக்கரண்டி
  10. துருவிய சீஸ் மற்றும் கிரேட்டட் ஹாட் சீஸ் சிறிதளவு
  11. கடலை எண்ணெய் இரண்டு தேக்கரண்டி
  12. டொமேட்டோ கெட்சப் அரை மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. கொதிக்கும் நீரில் மக்ரூணி/ பாஸ்தா 15 நிமிடம் உப்பு போட்டு சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்து வடித்துக்கொள்ளுங்கள்
  2. மறுபுறம் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தக்காளி மற்றும் மிளகாயை ஐந்து நிமிடம் வேக வைத்து தக்காளியின் தொழியை உறித்து கொள்ளுங்கள்
  3. ஆறிய பின் தக்காளி மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள்
  4. மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி இஞ்சி-பூண்டு விழுது நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. வதங்கியபின் அரைத்த தக்காளிச் சாற்றை ஊற்றவும்
  6. அதனுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு வாடை நீங்கும் வரை கொதிக்க விடுங்கள்
  7. அத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய் தூள் ,சேர்க்கவும்
  8. வாடை நீங்கி வரும்பொழுதே மிக்ஸட் ஹெர்ப் மற்றும் டொமேட்டோ கெட்சப் சேர்க்கவும்
  9. இறுதியில் துருவிய சீஸ் , மிளகு தூள் சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்
  10. கிரேட்டட் ஹார்ட் சீஸ் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்