வீடு / சமையல் குறிப்பு / முட்டை சாதம்

Photo of Instant Egg Rice by nithya vimalraj at BetterButter
373
1
0.0(0)
0

முட்டை சாதம்

Aug-28-2018
nithya vimalraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முட்டை சாதம் செய்முறை பற்றி

வாரத்தில் ஒருமுறை குழந்தைகளுக்கு மதிய உணவாக செய்து தரலாம்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெங்காயம் 2 பொடியாக நறுக்கியது
  2. தக்காளி 3 பொடியாக நறுக்கியது
  3. இஞ்சி பூண்டு ஒரு ஸ்பூன்
  4. கருவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. வீட்டில் அரைத்த குழம்பு மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  8. எண்ணெய் தேவைக்கேற்ப
  9. முட்டை 4
  10. வடித்த சாதம் 1 கப்
  11. கரம் மசாலா பொருட்கள் சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும்
  2. கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. தக்காளி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  5. இப்போது மஞ்சள் தூள் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்
  6. சிறிதளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் சிம்மில் வைக்கவும்
  7. எண்ணெய் பிரிந்து வரும் பொழுது முட்டையை உடைத்து ஊற்றவும்
  8. கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்
  9. வடித்த சாதத்தை முட்டையோடு சேர்த்து கலக்கவும்
  10. இப்பொழுது சுவையான முட்டை சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்