வீடு / சமையல் குறிப்பு / கருப்பு உளுந்து வாழை பழ சத்துமாவு போண்டா

Photo of Black urad dhal banana mix milllet bonda by Jaleela Kamal at BetterButter
0
1
0(0)
0

கருப்பு உளுந்து வாழை பழ சத்துமாவு போண்டா

Aug-30-2018
Jaleela Kamal
510 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கருப்பு உளுந்து வாழை பழ சத்துமாவு போண்டா செய்முறை பற்றி

கருப்பு உளுந்தை வேகவைத்து அதில் செய்யும் போண்டா

செய்முறை டாக்ஸ்

 • ఊరేయటం
 • శాఖాహారం
 • మీడియం/మధ్యస్థ
 • టిఫిన్ వంటకములు
 • తమిళనాడు
 • దోరగా వేయించటం
 • వేయించేవి
 • చిరు తిండి
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

 1. கருப்பு உளுந்து ஒரு கப்
 2. தேங்காய் அரை கப்
 3. வெல்லம் அரைகப் அல்லது சர்க்கரை
 4. ஏலக்காய் பொடி அரை தேக்கரண்டி
 5. போண்டா மாவு தாயாரிக்க
 6. கோதுமை மாவு அரை கப்
 7. சத்து மாவு (ராஹி,தினை,கம்பு,பார்லி) அரைகப்
 8. உப்பு ஒரு சிட்டிக்கை
 9. முட்டை ஒன்று (தேவைபட்டால்)
 10. சர்க்கரை ஒரு மேசைகரண்டி
 11. கனிந்த வாழைபழம் ஒன்று
 12. பட்டை பொடி கால் தேக்கரண்டி
 13. மைதா ரவுஸ் 1 மேசை கரண்டி
 14. உப்பு ஒரு சிட்டிக்கை

வழிமுறைகள்

 1. கருப்பு உளுந்தை கழுவி 8 மணி நேரம் ஊற வைக்கவும்.ஊறியது அதை குக்கரில் வேக வைத்து தண்ணீரை நன்கு வடிக்கவும்
 2. தண்ணீர் நன்கு வடிந்ததும் அதில் சர்க்கரை அல்லது வெல்லம் ஏலப்பொடி தேங்காய் துருவல் சேர்த்து கலந்து பிரிட்ஜில் வைக்கவும்.
 3. போண்டாவிற்கு மாவுரெடி செய்ய கோதுமை மாவுடன் பார்லி ராஹி தினை கம்பு பொடியை சேர்த்து சர்க்கரை,உப்பு,பட்டை பொடியை சேர்த்து கலக்கவும்.
 4. வாழைபழத்தை கலந்த மாவு கலவையுடன் சேர்த்து பிசையவும் .பிறகு முட்டை சேர்த்து கலக்கவும்.(முட்டை வேண்டாம் என்றால் தவிர்த்துகொள்ளாம்)
 5. தயாரித்த மாவுடன் (ரவுஸ்) அதாவது கட்டியாக ஒரு மேசைகரண்டி மைதா மாவில் ஒரு தேக்கரண்டியை தண்ண்ணீர் விட்டு கலக்கி கொள்ளவும். 5 நிமிடம் கழித்து கோதுமைகலவை மாவில் இந்த ரவுஸை சேர்த்து கலக்கவும்.
 6. ஒரு வடை சட்டியில் எண்ணை ஊற்றி காய விடவும்.இப்போது ப்ரிட்ஜில் வைத்துள்ள உளுந்து கலவையை கோதுமை மாவுடன் கலக்கவும். ஒரு ஸ்பூனால் அள்ளி ஊற்றி சூடான எண்ணையில் போட்டு பொரித்து
 7. பொறுமையாக வட சட்டியில் கொள்ளும் அளவுக்கு போட்டு பொரித்து எடுக்கவும்.
 8. ரொம்ப சுவையான அதே நேரம் சத்தான கருப்பு உளுந்து வாழைபழ சத்துமாவு போண்டா ரெடி.
 9. கவனிக்க: ரவுஸ் என்பது பைண்டிங்கு சேர்த்துள்ளேன் இது சேர்ப்பதால் மாவு எண்ணயில் விண்டு போகமல் வரும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்