வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் பருப்பு பாயசம்

Photo of Coconut milk dal payasam by sudha rani at BetterButter
437
0
0.0(0)
0

தேங்காய் பால் பருப்பு பாயசம்

Aug-31-2018
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் பருப்பு பாயசம் செய்முறை பற்றி

தேங்காய் சார்ந்த உணவு 2

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பாசிப்பருப்பு 1 கப்
  2. கடலைப்பருப்பு 1 கப்
  3. ஜவ்வரிசி 1/2 கப்
  4. வெல்லம் 2-1/2_3 கப்
  5. தண்ணீர் 6_8 கப்
  6. தேங்காய் 1 முழு காய்

வழிமுறைகள்

  1. கடலைப் பருப்பு மற்றும் ஜவ்வரிசி ஐ சுமார் 1 மணி நேரம் வரை ஊறவிடவும்
  2. பாசிப்பருப்பு மற்றும் ஊறிய கடலைப்பருப்பை 4 கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்
  3. முக்கால் பாகம் வெந்ததும் ஊறிய ஜவ்வரிசி சேர்த்து நன்கு வேகவிடவும்
  4. வெல்லத்துடன் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி வைக்கவும்
  5. தேங்காயை உடைத்து அதில் சிறிது மட்டும் பொடியாக நறுக்கவும்
  6. மீத தேங்காய் உடன் 1 கப் தண்ணீர் சேர்த்து கெட்டியான பால் எடுக்கவும்
  7. மீண்டும் 1 கப் தண்ணீர் ஊற்றி பால் எடுக்கவும்
  8. பருப்பு நன்கு வெந்ததும் வெல்லம் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்
  9. பின்னர் இரண்டாவதாக எடுத்த தேங்காய்ப் பாலை ஊற்றி நன்கு சுண்ட கொதிக்க விடவும்
  10. நன்கு திரண்டு வந்ததும் முதல் தேங்காய்ப் பாலை ஊற்றி லைட்டாக கொதிக்க விட்டு இறக்கவும்
  11. பின் நெய் விட்டு சூடானதும் நறுக்கிய தேங்காய் துண்டுகளை சேர்த்து இளம் சிவப்பாக வறுத்து கொட்டவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்