BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ பிடிகரணை கோலா உருண்டை குழம்பு

Photo of banana flower yam kola balls gravy by Umamaheswari Chellamuthu at BetterButter
0
0
0(0)
0

வாழைப்பூ பிடிகரணை கோலா உருண்டை குழம்பு

Aug-31-2018
Umamaheswari Chellamuthu
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ பிடிகரணை கோலா உருண்டை குழம்பு செய்முறை பற்றி

இந்த குழம்பில் உள்ள மருத்துவ பலன்கள்: கருணை கிழங்கு : மூலம் என்னும் வியாதிக்கு கருணை கிழங்கை ஒத்த மருந்து உலகில் வேறு எதுவும் இருக்க இயலாது . வாரம் ஒரு முறையேனும் கருணை கிழக்கை உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும் . உடலுக்கு குளிர்ச்சி தர கூடியது . கோடை காலத்துக்கு ஏற்ற உணவு . நல்லெண்ணெய் : இதுவும் கூட உடம்புக்கு குளிர்ச்சி தர கூடியது தான் . கொடம்புளி : சமையலுக்கு பயன் படுத்தும் சாதாரண புளி தொடர்ந்து உபயோக படுத்தி வருவதால் நாளடைவில் மூட்டு வலி உண்டாகும் . கொடம் புளி அந்த தீமை தராது . மேலும் கொழுப்பை கரைக்க கூடியது. வாழை பூ : வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு தர கூடியது . பெண்களின் மாத விடாய் தொடர்பான பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாகும் . குழம்பு இல்லாமல் வெறும் கோலா உருண்டைகளே மிகுந்த சுவையாக இருக்கும் . மாதம் ஒரு முறை இந்த குழம்பு உண்பது உடலுக்கு மிக நல்லது :-)

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • రాత్రి విందు
  • భారతీయ
  • పెనం పై వేయించటం/పాన్ ఫ్రై
  • వేయించేవి
  • మితముగా వేయించుట
  • సైడ్ డిషెస్
  • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சின்ன வெங்காயம் -10
  2. பூண்டு பற்கள் - 10
  3. இஞ்சி ,பூண்டு பேஸ்ட் -2 டீஸ்பூன்
  4. வெந்தையம் - 2 ஸ்பூன்
  5. சீரகம் - 1 /2 டீஸ்பூன் .
  6. கொடம்புளி -5 ( கேரளாவில் அதிகம் கிடைக்கும் . நம்ம ஊர் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ) ( கொடம்புளி கிடைக்க பெறாதவர்கள் சமையலுக்கு பயன் படுத்தும் புளியை ஒரு சிறிய எழுமிச்சை பழ அளவுக்கு பயன் படுத்தி கொள்ளலாம் .)
  7. மிளகாய் தூள் - 1 1 /2 ஸ்பூன்
  8. மல்லி தூள் - 2 ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் - சிறிது
  10. தேங்காய் -1/4 மூடி
  11. தக்காளி -3
  12. கருவேப்பில்லை ,மல்லித்தழை -சிறிது
  13. நள்ளெண்ணெய்- தேவையான அளவு
  14. கடுகு - சிறிது

வழிமுறைகள்

  1. வாணலியில் ,சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் , கடுகு போட்டு தாளித்து , பின்பு வெந்தையம் , சீரகம் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்
  2. அதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி ,அதனுடன் ,பூண்டு பற்கள் சேர்த்து வதக்கி மீண்டும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்கவும் .அதில் சிறிது மஞ்சள் தூள்,சேர்த்து ,அதனுடன் அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும் .
  3. தேவையான உப்பு ,மிளகாய் தூள் ,மல்லி தூள் இவற்றை சேர்த்து அதில் கொடம்புளியை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக கொதிக்க விடவும் . எண்ணெய் பிரிந்து வரும் வேளையில் அதில் தேங்காய் துருவலை மிக்ஸ்யில் அரைத்து குழம்பில் சேர்த்து விடவும் . குழம்பை நன்கு கொதிக்க விட்டு அதனுடன் ,பொரித்து வைத்த உருண்டைகளை சேர்க்கவும்
  4. வாழைப்பூ ,பிடிகரணை கோலா உருண்டை செய்வதை தனி பதிவாக வெளியிட்டுள்ளேன்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்