வீடு / சமையல் குறிப்பு / கத்திரிக்காய் பச்சடி

Photo of brinjal pachchadi by Apsara Fareej at BetterButter
256
0
0.0(0)
0

கத்திரிக்காய் பச்சடி

Sep-02-2018
Apsara Fareej
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கத்திரிக்காய் பச்சடி செய்முறை பற்றி

இது நெய் சாதம் மற்றும் பிரியாணிக்கு ஏற்ற ஒரு பக்க உணவு...

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கத்திரிக்காய் பெரியதாக - 1
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - பாதியளவு
  4. பூண்டு - 2 பல்
  5. இஞ்சி, பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
  6. புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
  7. தேங்காய் விழுது ( அ) தேங்காய் பால் - 1 மேசைக்கரண்டி
  8. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
  9. சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி
  10. மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி
  11. மஞ்சள்த்தூள் - 1/2 தேக்கரண்டி
  12. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
  13. நல்லெண்ணை - 4 மேசைக்கரண்டி
  14. கடுகு, உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  15. காய்ந்த மிளகாய் - 2
  16. கறிவேப்பிலை - 1 கொத்து
  17. சீனி - 3 தேக்கரண்டி
  18. உப்பு - தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. வெங்காயம், தக்காளியை மெல்லிதாக அரிந்துக்கொள்ளவும்.கத்திரிக்காயை அரைவட்ட வடிவில் மெல்லியதாக அரிந்து கொள்ளவும்.பூண்டையும் நீளமாக அரிந்து கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும், கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து விட்டு, அரிந்த வெங்காயம் , தக்காளி, பூண்டு இவைகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
  3. வதங்கிய பின், மஞ்சள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து கிளறி விட்டு பின்பு அரிந்த கத்திரிக்காயை சேர்த்து கிளறி குறைந்த தீயில் இரண்டு நிமிடம் வதங்க விடவும்.
  4. பின்னர், புளியை அரை டம்ளர் அளவு கரைத்து விட்டு அதில் மற்ற மசாலாத்தூள்களையும், தேங்காய் விழுது அல்லது பாலையும் சேர்த்து கரைத்து விட்டு வதங்கியவற்றில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
  5. சிறிது நேரத்திற்கு திறந்து பார்த்து, கத்திரிக்காய் வெந்து தண்ணீரும் முக்கால் வாசி சுண்டியதும், சீனியை தூவி விட்டு குறைந்த தீயிலேயே எண்ணெய் மிதக்கும் மூடி வைத்து விடவும்.
  6. நன்கு சுண்டி எண்ணெய் மிதக்க வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான கத்திரிக்காய் பச்சடி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்