வீடு / சமையல் குறிப்பு / பிரட் அல்வா

Photo of Bread Halwa by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
520
3
5.0(0)
0

பிரட் அல்வா

Sep-02-2018
Wajithajasmine Raja mohamed sait
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பிரட் அல்வா செய்முறை பற்றி

பிரட் அல்வா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பிரட் - 7 துண்டுகள்
  2. பால் - 1/2 லிட்டர்
  3. சர்க்கரை - 150 -200 கிராம்
  4. நெய் - 4 தேக்கரண்டி
  5. முந்திரி - 10 பொடியாக நறுக்கியது
  6. உலர் திராட்சை - 15- 20

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. முதலில் பிரட்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து 3 தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் முந்திரி, உலர் தீராட்சையை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  4. அதே நெய்யில் வெட்டி வைத்துள்ள பிரட்டை சேர்த்து வதக்கவும்.
  5. பிரட் பிரவுன் கலராக மாறும் வரை வதக்கவும்.
  6. இதனுடன் 1/2 லிட்டர்பாலை சேர்க்கவும்.
  7. பிரட் பாலுடன் வெந்நு கெட்டியாக வரும்.
  8. இப்பொழுது இதனுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.
  9. இதனுடன் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு அல்வா பதம் வரும் வரை கிளறவும்.
  10. நெய் பிரிந்து அல்வா பதம் வந்ததும் வறுத்து வைத்துள்ள முந்திரி, உலர் திராட்சையை சேர்த்து கிளறி இறக்கவும்.
  11. சுவையான எளிதில் செய்யக்கூடிய பிரட் அல்வா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்