வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பூரண போளி

Photo of Coconut Stuffed Poli by Jayasakthi Ekambaram at BetterButter
437
0
0.0(0)
0

தேங்காய் பூரண போளி

Sep-03-2018
Jayasakthi Ekambaram
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பூரண போளி செய்முறை பற்றி

தேங்காயையும் வெல்லத்தையும் பூரணமாக வைத்து செய்யும் போளி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு கால் கிலோ
  2. வெல்லம் முக்கால் கப்
  3. துருவிய தேங்காய் ஒரு கப்
  4. ஏலக்காய்த் தூள் அரை ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  6. நெய் 25 கிராம்
  7. உப்புத் தூள் அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மைதா மாவில் 4 ஸ்பூன் எண்ணெய் , தூள் உப்பு , மஞ்சள் தூள் கலந்து நன்றாக பிசையவும்
  2. சப்பாத்தி மாவை விட சற்று தளர்த்தியாக பிசையவும்
  3. ஒரு பத்து நிமிடம் நன்றாக பிசைந்தால் மாவு மிருதுவாக இருக்கும்
  4. பிசைந்து முடிந்த பிறகு 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக மேலே தடவி மூடி வைக்கவும்
  5. இந்த மாவை அரை மணி நேரம் ஊற விடவும்
  6. அந்த நேரத்தில் பூரணம் ரெடி செய்து கொள்ள வேண்டும்
  7. பூரணம் செய்வதற்கு தேங்காயை மிக்ஸியில் போட்டு துருவிக் கொள்ள வேண்டும்
  8. வெல்லத்தை கொதிக்கும் நீரில் போட்டு கரைந்ததும் வடிகட்டி கொள்ள வேண்டும்
  9. வடிகட்டிய வெல்லத்தை அடுப்பில் வைத்து நுரைத்தவுடன் அதில் தேங்காயை கொட்டி நன்றாகக் கிளற வேண்டும்
  10. உருட்டும் பதம் வரும் வரை நன்றாக கிளறி இறக்க வேண்டும்
  11. இந்த தேங்காய் பூரணத்தை உருண்டைகளாக செய்து கொள்ளவும்
  12. ஒரு வாழை இலையை எடுத்து அதன்மேல் நன்றாக எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும்
  13. மைதா மாவை எடுத்து உருண்டையாக செய்து வாழை இலையின் மேல் வைத்து நன்றாக தட்டவும்
  14. அதன் நடுவில் தேங்காய் பூரணத்தை வைத்து நன்றாக மூடவும்
  15. மூடிய பாகத்தை அடியில் வைத்து கையால் நன்றாக பரப்பி தட்டவும்
  16. தோசைக்கல்லை காய வைத்து அதன் மேல் எண்ணெய் தடவவும்
  17. தோசைக் கல் சூடானதும் அதன் மேல் போளியைப் போட்டு இருபுறமும் சிவக்க விட்டு எடுக்கவும்
  18. அதன் மேல் நெய் தடவி சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்