வீடு / சமையல் குறிப்பு / ரவை தேங்காய் அடையும் தேங்காய் புளி சட்னியும்

Photo of Rava coconut Adai and Coconut Tamarind chutney by Jayasakthi Ekambaram at BetterButter
413
0
0.0(0)
0

ரவை தேங்காய் அடையும் தேங்காய் புளி சட்னியும்

Sep-04-2018
Jayasakthi Ekambaram
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ரவை தேங்காய் அடையும் தேங்காய் புளி சட்னியும் செய்முறை பற்றி

வீட்டில் இட்லி மாவு இல்லாத போது அவசரத்திற்கு ரவை, தேங்காய், தயிர் கலந்து செய்யும் அடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ரவை 100 கிராம்
  2. அரிசி மாவு 3 ஸ்பூன்
  3. தயிர் 50 மில்லி
  4. வெங்காயம் ஒன்று
  5. பச்சை மிளகாய் 2
  6. உப்பு தேவையான அளவு
  7. கருவேப்பிலை ஒரு கொத்து
  8. சட்னி செய்வதற்கு:
  9. தேங்காய் அரை மூடி
  10. காய்ந்த மிளகாய் இரண்டு
  11. வெங்காயம் பாதி
  12. பூண்டு இரண்டு பற்கள்
  13. பொட்டுக்கடலை 2 ஸ்பூன்
  14. புளி நெல்லிக்காய் அளவு
  15. உப்பு தேவையான அளவு
  16. தாளிப்பதற்கு:
  17. கடுகு அரை ஸ்பூன்
  18. உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
  19. கருவேப்பிலை ஒரு கொத்து

வழிமுறைகள்

  1. ரவையுடன் அரிசி மாவு தயிர் வெங்காயம் பச்சை மிளகாய் தேங்காய் துருவல் உப்பு தூள் அனைத்தையும் கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. அரை மணி நேரத்திற்கு பிறகு சிறிய அடைகளாக தோசைக்கல்லில் ஊற்றி எடுக்கவும்
  3. சட்னி செய்வதற்கு தேங்காயுடன் பொட்டுக்கடலை காய்ந்த மிளகாய் வெங்காயம் பூண்டு பற்கள் உப்பு அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்
  4. புளித் தண்ணீர் ஊற்றி நைசாக அரைக்கவும்
  5. தாளிக்கும் கரண்டியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் எடுத்து கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்