வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு லாலி பாப்

Photo of Potato Lollipop by Saras Viswam at BetterButter
2693
27
4.3(0)
0

உருளைக்கிழங்கு லாலி பாப்

Jun-20-2016
Saras Viswam
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • ஃப்யூஷன்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. உருளைக்கிழங்கு, வேகவைத்துத் தோல் உரிக்கப்பட்டது - 4 எண்ணிக்கை
  2. இஞ்சிப்பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  3. பிரெட் துண்டுகள் - 4 துண்டுகள்
  4. சோள மாவு - 4 தேக்கரண்டி
  5. கொத்துமல்லி இலைகள் பொடியாக நறுக்கியது - 2 தேக்கரண்டி
  6. கடலைப் பருப்பு மசாலா பவுடர் - 2 தேக்கரண்டி
  7. உப்பு - சுவைக்காக
  8. மாங்காய்த்தூள் - 1 தேக்கரண்டி
  9. எண்ணெய் - பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, நன்றாக மசித்துக்கொள்ளவும்.
  2. இஞ்சிப்பூண்டு விழுது, நறுக்கிய கொத்துமல்லி இலைகள், கடலை மசாலா பவுடர், மாங்காய்த் தூள், தேவையான உப்பு, சோள மாவு ஆகியவற்றைக் கலந்துகொள்ளவும்.
  3. பிரெட் துண்டுகளைத் தண்ணீரி்ல் 2-3 நிமிடங்கள் ஊறவைத்து தண்ணீரை நன்றாக பிழிந்து மசித்து உருளைக்கிழங்கு கலவையில் சேர்த்துக்கொள்ளவும்.
  4. மாவாகத் தயாரிக்க நன்றாகக் கலந்தகொள்ளவும்.
  5. நடுத்தர அளவு லாலி பாப்புகளை மாவில் இருந்து தயாரித்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
  6. 5 நிமிடங்கள் ஆறவைக்கவும்.
  7. லாலி பாப் குச்சிகளை அல்லது சிற்றுண்டி பிக்கர்களை ஒவ்வொரு லாலிப்பாப்பிலும் நுழைக்கவும்.
  8. உருளைக்கிழங்கு லாலிப்பாபுகள் பரிமாறுவதற்குத் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்