வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ கோஃப்தா கறி

Photo of Banana flower Kofta curry by saranya sathish at BetterButter
284
0
0.0(0)
0

வாழைப்பூ கோஃப்தா கறி

Sep-04-2018
saranya sathish
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ கோஃப்தா கறி செய்முறை பற்றி

வாழைப்பூ கோஃப்தா கறி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோப்தா செய்ய தேவையான பொருட்கள்:
  2. பொடியாக நறுக்கிய வாழைப்பூ ஒரு கப்
  3. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  4. கடலை மாவு அரை கப்
  5. கரம் மசாலா 1 டீஸ்பூன்
  6. நறுக்கிய பச்சை மிளகாய் 1
  7. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  8. உப்பு அரை டீஸ்பூன்
  9. பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒன்று
  10. நறுக்கிய கொத்தமல்லி கறிவேப்பிலை சிறிது
  11. எண்ணெய் தேவையான அளவு
  12. கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
  13. நறுக்கிய வெங்காயம் 3
  14. நறுக்கிய தக்காளி மூன்று
  15. இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள்ஸ்பூன்
  16. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  17. உப்பு ஒரு டீஸ்பூன்
  18. சர்க்கரை அரை டீஸ்பூன்
  19. கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
  20. தண்ணீர் - தேவையான அளவு
  21. பால் - 1/2 கப்
  22. பிரெச் கிரீம் - 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் நறுக்கிய வாழைப்பூ இஞ்சி பூண்டு விழுது வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி பச்சை மிளகாய் உப்பு கடலை மாவு மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  2. பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  3. இப்பொழுது பிசைந்து வைத்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக காய வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  5. ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு வெண்ணெய் சேர்த்து பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
  6. வெங்காயம் வதங்கியவுடன் நறுக்கிய தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  7. பின் கரம் மசாலா மிளகாய் தூள் உப்பு சர்க்கரை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  8. நன்றாக அனைத்தும் வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.
  9. பின் அரைத்த விழுதை மீண்டும் அதே கடாயில் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  10. தேவையான அளவு பால் சேர்த்து கலந்து பொரித்து வைத்த உருண்டைகளை சேர்த்து கொத்தமல்லி இலை,பிரேச் கிரீம் சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்