BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் பாவ் பாஜி

Photo of Banana pav bhaji by சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம் at BetterButter
0
1
0(0)
0

வாழைக்காய் பாவ் பாஜி

Sep-04-2018
சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம்
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் பாவ் பாஜி செய்முறை பற்றி

வாழைக்காயில் செய்யப்படும் கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைக்காய் ஒன்று
  2. உருளைக்கிழங்கு 2
  3. கேரட் ஒன்று
  4. தக்காளி நான்கு
  5. வெங்காயம் ஒன்று
  6. குடைமிளகாய் ஒன்று
  7. வெண்ணெய் தேவைக்கேற்ப
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  10. பாவ்பாஜி மசாலா தூள் ஒன்றரை டீஸ்பூன்
  11. மிளகாய்த்தூள் காரத்துக்கேற்ப
  12. கஸ்தூரி மேத்தி சிறிது
  13. எலுமிச்சம் பழச்சாறு அரை பழம்

வழிமுறைகள்

  1. குக்கரில் கேரட் வாழைக்காய் உருளைக்கிழங்கு மூன்றையும் தண்ணீர் விட்டு இரண்டு விசில் விடவும்
  2. வேகவைத்த காய்களை பொடியாக நறுக்கவும்
  3. கடாயில் வெண்ணெய் விட்டு வெந்த காய்கறி தக்காளி குடை மிளகாய் உப்பு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்
  4. காய்கள் வெந்ததும் நன்றாக மசித்து கொள்ளவும்
  5. காய்களை நன்றாக மசித்து ஒரு ஓரமாக கரண்டியால் தள்ளி நடுவில் குழி விடவும்
  6. அதன் நடுவில் வெண்ணை வைக்கவும்
  7. அந்த வெண்ணையின் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம் பாவ்பாஜி மசாலா தூள் மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு விழுது உப்பு கஸ்தூரி மேத்தி சேர்த்து லேசாக வதக்கவும்
  8. வெங்காயத்தின் மேல் எலுமிச்சை சாறு பிழியவும்
  9. கரண்டியால் நடுவில் உள்ள பொருள்களை மட்டும் நன்றாக வதக்கவும்
  10. 3 நிமிடம் அப்படியே நன்றாக வதக்கவும் பின் காய்கறி மசாலாவுடன் கலக்கவும்
  11. மசாலா ரெடி
  12. ஒரு கடாயில் வெண்ணெய் போட்டு அதில் மிளகாய் தூள் கொத்தமல்லி இலை பாவ்பாஜி மசாலா தூள் சேர்த்து கிளறவும்
  13. இந்தக் கலவையில் பாவ் பிரட்டை சேர்த்து வறுக்கவும்.
  14. சுவையான வாழைக்காய் பாவ் பாஜி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்