வீடு / சமையல் குறிப்பு / ஆலு போண்டா/உருளைக்கிழங்கு போண்டா

Photo of Aloo Bonda / Potato Bonda by Hema Shakthi at BetterButter
420
12
5.0(0)
0

ஆலு போண்டா/உருளைக்கிழங்கு போண்டா

Jun-20-2016
Hema Shakthi
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • மீடியம்
 • கிட்ஸ் ரெசிப்பிஸ்
 • தமிழ்நாடு
 • ஃபிரையிங்
 • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. ஆலு பூரணத்திற்கு:
 2. உருளைக்கிழங்கு - 8முதல் 10 வரை (நடுத்தர அளவு)
 3. பெரிய வெங்காயம் - 1
 4. பச்சை மிளகாய் - 4
 5. இஞ்சி 1 இன்ச் துண்டு
 6. எண்ணெய் - 1 தேக்கரண்டி
 7. கடுகு - 2 தேக்கரண்டி
 8. மஞ்சள் தூள் ½ தேக்கரண்டி
 9. பெருங்காயம் - ½ தேக்கரண்டி
 10. கொத்துமல்லி - கையளவு
 11. உப்பு - தேவையான அளவு
 12. மாவுக்காக:
 13. கடலை மாவு - 1 கப்
 14. அரிசி மாவு ¾ கப்
 15. மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
 16. சிவப்பு மிளகாய் - 1 தேக்கரண்டி
 17. உப்பு - தேவையான அளவு
 18. சமையல் சோடா மாவு - ½ தேக்கரண்டி (விருப்பமான அளவு)
 19. தண்ணீர் - அடர்த்தியான மாவைத் தயாரிப்பதற்கு
 20. பொரிப்பதற்கு:
 21. எண்ணெய் - போண்டாவைப் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

 1. பூரணம் தயாரிக்க:
 2. உருளைக்கிழங்கை பிரஷர் குக்கரில் வேகவைத்து சிறிது நேரம் குளிர்ந்த நீரில் ஆறவிடவும்.
 3. இப்போது, தோலை உரித்து நன்றாக மசித்து எடுத்து வைக்கவும்.
 4. வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
 5. இஞ்சியின் தோலை உரித்து துருவிக்கொள்ளவும்.
 6. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகு சேர்க்கவும்.
 7. அது வெடிக்க ஆரம்பித்ததும், பச்சை மிளகாய், நறுக்கப்பட்ட இஞ்சி, வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் மிருதுவாகி நிறம் மாறும்வரை வதக்கவும்.
 8. இப்போது மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், உப்பு, நறுக்கப்பட்ட கொத்துமல்லி, மசித்த உருளைக்கிழங்கு ஆகியவற்றைச் சேர்த்து சிறு தீயில் நன்றாகக் கலக்கவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.
 9. எல்லாம் நன்றாகக் கலக்கும்வரைத் தொடர்ந்து கலந்துகொண்டே இருக்கவும்.
 10. அடுப்பில் இருந்து இறக்கி, வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி ஆறவிடவும்.
 11. சூடாக இருக்கும்போது, சிறுசிறு உருண்டைகளாகச் செய்து ஒரு தட்டில் அடுக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 12. மாவில் தொய்பது பொரிப்பதற்குப் பூரணம் தயார்.
 13. மாவு தயாரிப்பதற்கு:
 14. ஒரு கலவைப் பாத்திரத்தை எடுத்து கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய்த் தூள், சேர்ப்பதாக இருந்தால் சமையல் சோடா மாவு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். நான் சமையல் சோடா மாவு சேர்த்தேன்.
 15. நன்றாகக் கலந்த பிறகு தொடர்ந்து கிண்டிக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்க்கவும். மாவு அடர்த்தியாக கெட்டிகள் ஏதுமில்லாமல் இருப்பதைப் பார்த்துக்கொள்ளவும். மாவு அடர்த்தியாக இருக்கவேண்டும், பஜ்ஜி மாவை விட.
 16. போண்டாவைப் பொரிப்பதற்கான மாவு இப்போது தயார்.
 17. போண்டாவைப் பொரிப்பதற்கு:
 18. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்ளவும். எண்ணெய் போதுமான அளவிற்குச் சூடாகிவிட்டதா என்று சோதிக்க, தயாரித்து வைத்துள்ள மாவில் ஒரு சிறு பகுதியை எடுத்து விட்டுப் பார்க்கவும். வறுபட்ட மாவு உடனடியாக மேலெழும்பவேண்டும்.
 19. இப்போது எண்ணெய்க்கு அருகில் மாவு பாத்திரத்தைப் பிடித்துக்கொண்டு தயாரித்து வைத்துள்ள உருளை உருண்டைகளை மாவில் தொய்த்து வானலியின் விளிம்பிலிருந்து நழுவவிடவும், தெரிக்காமல் இருப்பதற்காக. பிறகு மெதுவாகச் சூடான எண்ணெயில் விடவும்.
 20. ஒரு தொகுப்பில் 5 அல்லது 6 போண்டாக்களை, வானலியின் அளவைப் பொறுத்து நீங்கள் பொரித்தெடுக்கலாம்.
 21. எண்ணெய் மிதமானச் சூட்டில் இருக்கவேண்டும். ஒரு பக்கம் வெந்ததும், அடுத்தப் பக்கத்தைக் கவனமாகத் திருப்பிப்போடவும். இல்லையேல் எண்ணெய் உங்கள் கைகளில் தெரித்துவிடும்.
 22. போண்டா சற்றே அடர்த்தியான பொன்னிறத்திற்கு மாறியதும், கவனமாகப் போண்டாக்களை எடுத்து கொலாண்டரில் வைக்கவும்.
 23. தேங்காய் சட்டினி அல்லது தக்காளிச் சட்டினி என உங்களுக்குப் பிடித்தவற்றோடு சூடாகப் போண்டாவைப் பரிமாறவும்.
 24. பூரணம் மிகச் சூடாக இருக்கும் அதனால் குழந்தைகளுக்குப் பரிமாறும்போது கவனம் தேவை.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்