வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் கட்லெட்

Photo of Raw Banana Cutlet by Jayasakthi Ekambaram at BetterButter
332
0
0.0(0)
0

வாழைக்காய் கட்லெட்

Sep-05-2018
Jayasakthi Ekambaram
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் கட்லெட் செய்முறை பற்றி

வாழைக்காயை வேக வைத்து துருவி செய்யும் கட்லெட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைக்காய் ஒன்று
  2. வெங்காயம் ஒன்று
  3. பச்சை மிளகாய் ஒன்று
  4. மிளகாய்த்தூள் முக்கால் டீஸ்பூன்
  5. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  6. சோம்புத்தூள் அரை ஸ்பூன்
  7. கடலை மாவு 2 டீஸ்பூன்
  8. அரிசி மாவு 2 டீஸ்பூன்
  9. கான்பிளவர் 2ஸ்பூன்
  10. உப்புத்தூள் ஒரு ஸ்பூன்
  11. கறிவேப்பிலை ஒரு கொத்து
  12. கொத்தமல்லித்தழை ஒரு கைப்பிடி அளவு
  13. எண்ணெய் கால் லிட்டர்
  14. தண்ணீர் இரண்டு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சிறிது உப்பு சேர்த்து வாழைக்காயை பத்து நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. வாழைக்காயின் தோலை உரித்து எடுத்து துருவிக் கொள்ளவும்
  3. வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  4. துருவிய வாழைக்காய் உடன் வெங்காயம், பச்சை மிளகாய், கடலை மாவு, அரிசி மாவு, கார்ன் ஃப்ளார், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தூள், 2 ஸ்பூன் எண்ணெய், 2 ஸ்பூன் தண்ணீர் விட்டு நன்றாக பிசையவும்.
  5. கருவேப்பிலை கொத்தமல்லி தழை கலக்கவும்
  6. இந்த மாவை உருண்டைகளாக பிடித்து வடைகள் போல தட்டி வைக்கவும்
  7. அடுப்பில் வாணலியை வைத்து கொஞ்சமாக எண்ணெய் ஊற்றவும்
  8. எண்ணெய் நன்றாக காய்ந்ததும் தணலை குறைத்து வைத்து வறுத்து எடுக்கவும்.
  9. டொமேட்டோ சாஸ் உடன் சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்