BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் இரு புளிக்குழம்பு

Photo of Raw banana irupuli kuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
0
0
0(0)
0

வாழைக்காய் இரு புளிக்குழம்பு

Sep-06-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் இரு புளிக்குழம்பு செய்முறை பற்றி

இரண்டு விதமான புளிப்பு கொண்டு தேங்காய் வாழைக்காயை வைத்து செய்யும் குழம்பு இது.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • వెయించడం/స్టిర్ ఫ్రై
  • ఉడికించాలి
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைக்காய் ஒன்று
  2. விருப்பப்பட்டால் முருங்கைக்காய் துண்டுகள் 4 முதல் 6
  3. உப்பு முக்கால் தேக்கரண்டி
  4. தயிர் அரை கப்
  5. புளி பாதி நெல்லிக்காய் அளவு
  6. தேங்காய் துருவல் அரை கப்
  7. வறுப்பதற்கு தேவையானவை
  8. தேங்காய் எண்ணெய் 2 டிராப்ஸ்
  9. உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி
  10. வெந்தயம் அரை தேக்கரண்டி
  11. மிளகாய்வற்றல் 3 அல்லது 4
  12. தாளிக்க தேவையானவை
  13. தேங்காய் எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  14. கடுகு உளுத்தம்பருப்பு தலா அரை தேக்கரண்டி
  15. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  16. பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் 4 முதல் 6

வழிமுறைகள்

  1. வாழைக்காய் (விருப்பப்பட்டால் முருங்கைக்காய்)உப்பு மஞ்சள் பொடி புளி சேர்த்து வேக விடவும்
  2. வறுக்க கொடுத்தவற்றை வறுத்து தேங்காயுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. தயிரை சிறிது தண்ணீர் விட்டு நன்றாகக் கடைந்து கொள்ளவும்
  4. வேகவைத்த வாழைக்காயில் அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விடவும்
  5. கடைந்த தயிர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்
  6. தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்