வீடு / சமையல் குறிப்பு / மோர் குழம்பு

Photo of Moor kulambu by Deepa Srivatsan at BetterButter
521
0
5.0(0)
0

மோர் குழம்பு

Sep-06-2018
Deepa Srivatsan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மோர் குழம்பு செய்முறை பற்றி

அரைக்கும் பொழுது வெந்தயம் சேர்த்து இருப்பதால் உடலுக்கு குளிர்ச்சி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கெட்டியாக கடைந்த மோர் இரண்டு டம்ளர்
  2. வெண்டக்காய் பூசணிக்காய் அல்லது கத்திரிக்காய் ஐந்தாறு துண்டுகள்(நறுக்கியது)
  3. தேங்காய்த்துருவல் 2 கரண்டி
  4. பச்சை மிளகாய் ஆறு
  5. வெந்தயம் அரை டீஸ்பூன்
  6. உளுத்தம்பருப்பு 1 1/2 டீஸ்பூன்
  7. பெருங்காயம் சிறிதளவு
  8. அரிசி ஒரு ஸ்பூன்
  9. துவரம் பருப்பு ஒரு ஸ்பூன்
  10. கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன்
  11. கடுகு அரை டீஸ்பூன்
  12. எண்ணெய் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு வெந்தயம் மிளகாய் பெருங்காயம் ஆகியவற்றை நன்றாக வறுக்கவும்
  2. காய்கறியை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீரில் வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
  3. வறுத்ததை துவரம் பருப்பு மற்றும் அரிசியை சேர்த்து 5 நிமிடங்கள் தண்ணீரில் ஊற விடவும்
  4. பின் அதனை தேங்காயுடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்
  5. அரைத்ததை மோருடன் கட்டியில்லாமல் கலந்து வாணலியில் ஊற்றி வெந்த காய்கறியை சேர்த்து ஒரு கொதி வந்ததும் அணைக்கவும்
  6. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து சிறிது கொத்தமல்லி தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்