வீடு / சமையல் குறிப்பு / வெண்ணெய் கசியும் உருளைக்கிழங்குத் துண்டுகள் ( பீசா பாணி)

Photo of Cheesy Potato Slices (Pizza Style) by Shobha Keshwani at BetterButter
238
5
0.0(0)
0

வெண்ணெய் கசியும் உருளைக்கிழங்குத் துண்டுகள் ( பீசா பாணி)

Jun-20-2016
Shobha Keshwani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • கிட்ஸ் ரெசிப்பிஸ்
 • ஃப்யூஷன்
 • கிரில்லிங்
 • ஃபிரையிங்
 • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. உருளைக்கிழங்கு 1 ( பெரியது அல்லது தேவையான அளவு)
 2. தக்காளி 2
 3. பூண்டு விழுது 1 தேக்கரண்டி
 4. தக்காளிக் கூழ் 2 தேக்கரண்டி
 5. தக்காளி கெட்சப் 1 தேக்கரண்டி
 6. வெண்ணெய் துருவல் 3-4 தேக்கரண்டி
 7. கற்பூரவள்ளி 1 தேக்கரண்டி
 8. சிவப்பு மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி
 9. சுவைக்கேற்ற உப்பு
 10. எண்ணெய்
 11. பசலிக்கீரை 1/2 கொத்து ( அலங்கரிக்க)

வழிமுறைகள்

 1. தக்காளியை வதக்கவும். உப்பு, சிவப்பு மிளகாய் தூள், பூண்டு, தக்காளி கூழ், கெச்சப் சேர்த்து பீசா சாஸ் தயாரிக்கவும். கற்பூரவள்ளியால் சுவையூட்டவும்.
 2. உருளைக்கிழங்கைத் தோலுரித்து துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். உப்பு சேர்த்த தண்ணீரில் அதை 10 நிமிடங்கள் விடவும். பாதியாகும் வரை வறுக்கவும். வடிகட்டி எடுத்து வைக்கவும்.
 3. பசலிக் கீரையை நறுக்கி அதன்மீது உப்பைத் தூவவும். எண்ணெயை சூடுபடுத்தி மொறுமொறுப்பாகும் வரை அவற்றை பொரித்தெடுக்கவும் ( ஒரு பெரிய ஜல்லிகரண்டியால்).
 4. வேக வைக்கப் பயன்படுத்தப்படும் தட்டில் உருளைக்கிழங்கு துண்டுகளை அடுக்கி பீசா சாசைத்தடவி, துருவப்பட்ட வெண்ணெயை மேலே வைக்கவும்.
 5. முன்னே சூடுபடுத்தப்பட்ட ஓவனில் 8-10 நிமிடங்கள் வெண்ணெய் உருகும் வரை பேக் செய்யவும்.
 6. மொறுமொறுப்பான பசலிக்கீரை அடுக்கின் மீது வைத்துப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்