தேங்காய் பன் | Coconut Bun in Tamil

எழுதியவர் Jayasakthi Ekambaram  |  6th Sep 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Coconut Bun by Jayasakthi Ekambaram at BetterButter
தேங்காய் பன்Jayasakthi Ekambaram
 • ஆயத்த நேரம்

  3

  1 /2 மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  6

  மக்கள்

1

0

தேங்காய் பன் recipe

தேங்காய் பன் தேவையான பொருட்கள் ( Ingredients to make Coconut Bun in Tamil )

 • மைதா 300 கிராம்
 • பட்டர் 50கிராம்
 • சர்க்கரை 6 ஸ்பூன்
 • தேங்காய் அரை மூடி
 • செர்ரிப்பழம் 50கிராம்
 • சிகப்பு டூட்டி ஃப்ரூட்டி 50 கிராம்
 • பச்சை கலர் டூட்டி ஃப்ரூட்டி 50 கிராம்
 • பால் 200 கிராம்
 • ஈஸ்ட் 2 ஸ்பூன்
 • தூள் உப்பு கால் டீஸ்பூன்

தேங்காய் பன் செய்வது எப்படி | How to make Coconut Bun in Tamil

 1. 200 கிராம் வெதுவெதுப்பான பாலில் 4 ஸ்பூன் சர்க்கரை இரண்டு ஸ்பூன் ஈஸ்ட் ஊற வைக்கவும்
 2. ஐந்து நிமிடம் ஊற வைத்தால் அது நன்றாக நுரைத்து வரும்
 3. அரை மூடி தேங்காயை நன்றாக துருவிக் கொள்ளவும்
 4. செர்ரிப் பழத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்
 5. தேங்காய் செர்ரிப்பழம் 3 ஸ்பூன் சர்க்கரை ஒரு டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் கலந்து வைத்தால் ஸ்டஃப்பிங் ரெடி.
 6. மைதா மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் ஈஸ்ட் கலந்த பாலையும் இரண்டு ஸ்பூன் உருக்கிய பட்டரையும் உப்புத்தூளையும் கலந்து பிசையவும்
 7. இந்த மாவு ரொம்ப இளக்கமாக இருப்பதால் சமையல் மேடையில் மைதா மாவை தூவி அதில் இந்த மாவை போட்டு நன்றாக பிசையவும்
 8. மேலே இரண்டு ஸ்பூன் பட்டரை தடவி ஒரு ஈர துணி போட்டு மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்
 9. மூன்று மணி நேரம் கழித்து அந்த மாவை இரண்டு பாகமாக பிரித்துக் கொள்ளவும்
 10. முதல் பாகத்து மாவை சப்பாத்தி போல் திரட்டி பட்டர் தடவிய பாத்திரத்தின் உள்ளே வைக்கவும்
 11. அதன் மேலே ஸ்டஃப்பிங்கை நன்றாக பரவலாக தூவி விடவும்
 12. முதல் சப்பாத்தியின் ஓரத்தில் தண்ணீர் தொட்டு ஈரப்படுத்தி வைக்கவும்
 13. மீதி இருக்கும் மாவை திரட்டி இரண்டாவது சப்பாத்தி செய்யவும்
 14. இதை ஸ்டஃபிங் மேலே மூடி நன்றாக ஓரங்களை அழுத்தி விடவும்
 15. இதை மூடி வைத்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்
 16. ஒரு குக்கரின் உள்ளே உப்பு கொட்டி அதை 15 நிமிடம் ப்ரீஹீட் செய்யவும்
 17. குக்கரில் உள்ளே இந்த பாத்திரத்தை வைத்து மூடவும்
 18. குக்கருக்கு கேஸ்கெட் வெயிட் இரண்டும் உபயோகிக்கக்கூடாது
 19. 20 நிமிடங்கள் சிறிய தீயில் வைத்து பேக் செய்யவும்
 20. நன்றாக ஆறிய பிறகு ஒரு தட்டில் கவிழ்க்கவும்
 21. பன் மேலே பட்டரை நன்றாக தடவவும்
 22. ஆறிய பிறகு துண்டுகளாக போடவும்

Reviews for Coconut Bun in tamil (0)