வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பன்

Photo of Coconut Bun by Jayasakthi Ekambaram at BetterButter
1250
1
0.0(0)
0

தேங்காய் பன்

Sep-06-2018
Jayasakthi Ekambaram
210 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பன் செய்முறை பற்றி

தேங்காயில் ஸ்டஃப்பிங்கில் வைத்து செய்யும் பன்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மைதா 300 கிராம்
  2. பட்டர் 50கிராம்
  3. சர்க்கரை 6 ஸ்பூன்
  4. தேங்காய் அரை மூடி
  5. செர்ரிப்பழம் 50கிராம்
  6. சிகப்பு டூட்டி ஃப்ரூட்டி 50 கிராம்
  7. பச்சை கலர் டூட்டி ஃப்ரூட்டி 50 கிராம்
  8. பால் 200 கிராம்
  9. ஈஸ்ட் 2 ஸ்பூன்
  10. தூள் உப்பு கால் டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. 200 கிராம் வெதுவெதுப்பான பாலில் 4 ஸ்பூன் சர்க்கரை இரண்டு ஸ்பூன் ஈஸ்ட் ஊற வைக்கவும்
  2. ஐந்து நிமிடம் ஊற வைத்தால் அது நன்றாக நுரைத்து வரும்
  3. அரை மூடி தேங்காயை நன்றாக துருவிக் கொள்ளவும்
  4. செர்ரிப் பழத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்
  5. தேங்காய் செர்ரிப்பழம் 3 ஸ்பூன் சர்க்கரை ஒரு டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் கலந்து வைத்தால் ஸ்டஃப்பிங் ரெடி.
  6. மைதா மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் ஈஸ்ட் கலந்த பாலையும் இரண்டு ஸ்பூன் உருக்கிய பட்டரையும் உப்புத்தூளையும் கலந்து பிசையவும்
  7. இந்த மாவு ரொம்ப இளக்கமாக இருப்பதால் சமையல் மேடையில் மைதா மாவை தூவி அதில் இந்த மாவை போட்டு நன்றாக பிசையவும்
  8. மேலே இரண்டு ஸ்பூன் பட்டரை தடவி ஒரு ஈர துணி போட்டு மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்
  9. மூன்று மணி நேரம் கழித்து அந்த மாவை இரண்டு பாகமாக பிரித்துக் கொள்ளவும்
  10. முதல் பாகத்து மாவை சப்பாத்தி போல் திரட்டி பட்டர் தடவிய பாத்திரத்தின் உள்ளே வைக்கவும்
  11. அதன் மேலே ஸ்டஃப்பிங்கை நன்றாக பரவலாக தூவி விடவும்
  12. முதல் சப்பாத்தியின் ஓரத்தில் தண்ணீர் தொட்டு ஈரப்படுத்தி வைக்கவும்
  13. மீதி இருக்கும் மாவை திரட்டி இரண்டாவது சப்பாத்தி செய்யவும்
  14. இதை ஸ்டஃபிங் மேலே மூடி நன்றாக ஓரங்களை அழுத்தி விடவும்
  15. இதை மூடி வைத்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்
  16. ஒரு குக்கரின் உள்ளே உப்பு கொட்டி அதை 15 நிமிடம் ப்ரீஹீட் செய்யவும்
  17. குக்கரில் உள்ளே இந்த பாத்திரத்தை வைத்து மூடவும்
  18. குக்கருக்கு கேஸ்கெட் வெயிட் இரண்டும் உபயோகிக்கக்கூடாது
  19. 20 நிமிடங்கள் சிறிய தீயில் வைத்து பேக் செய்யவும்
  20. நன்றாக ஆறிய பிறகு ஒரு தட்டில் கவிழ்க்கவும்
  21. பன் மேலே பட்டரை நன்றாக தடவவும்
  22. ஆறிய பிறகு துண்டுகளாக போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்