வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ வறுவல்

Photo of Banana flower fry by Karuna Pooja at BetterButter
503
0
0.0(0)
0

வாழைப்பூ வறுவல்

Sep-07-2018
Karuna Pooja
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ வறுவல் செய்முறை பற்றி

கர்ப்பப்பை தொற்றுகளுக்கு சிறந்த மருந்தாக விளங்கும் வாழைப்பூவின் வருவல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைப்பூ 1
  2. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  3. சிறிய வெங்காயம் 100 கிராம்
  4. கருவேப்பிலை சிறிது
  5. கடுகு 1/4 டீஸ்பூன்
  6. மிளகாய்ப் 1/2 டீஸ்பூன்
  7. மஞ்சள் தூள் சிறிதளவு
  8. எண்ணெய் 1 டீஸ்பூன்
  9. சீரகப் பொடி அரை டீஸ்பூன்
  10. கரம் மசாலா தூள் 1/4 டீஸ்பூன்
  11. மிளகுத்தூள் அரை டீஸ்பூன்
  12. தேங்காய் துருவல் 1 கப்
  13. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகை பொரிய பின்பு சிறிய வெங்காயம் நறுக்கி கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  2. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  3. மஞ்சள்தூள் சீரகத்தூள் கரம் மசாலாத்தூள் மிளகாய்த்தூள் ஆகிய பொடிகளை சேர்த்து வதக்கவும்
  4. நறுக்கிய வாழைப்பூவை சேர்த்து வதக்கவும்.
  5. வதக்கிய பின்பு தேவையான அளவு தண்ணீர் தெளித்து வதக்கவும்
  6. இடையே தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்
  7. தண்ணீர் வற்றிய பின்பு தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்