எளிதாகச் செய்யக்கூடிய வெண்ணெய் முறுக்கு | Easy Butter Murukku in Tamil

எழுதியவர் Hema Shakthi  |  21st Jun 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Easy Butter Murukku by Hema Shakthi at BetterButter
எளிதாகச் செய்யக்கூடிய வெண்ணெய் முறுக்குHema Shakthi
  • ஆயத்த நேரம்

    7

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    25

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    5

    மக்கள்

132

0

எளிதாகச் செய்யக்கூடிய வெண்ணெய் முறுக்கு

எளிதாகச் செய்யக்கூடிய வெண்ணெய் முறுக்கு தேவையான பொருட்கள் ( Ingredients to make Easy Butter Murukku in Tamil )

  • அரிசி மாவு - 4 கப் (குவியல்)
  • வறுத்த உளுத்தம்பருப்பு -½ கப்
  • எண்ணெயை அல்லது வெண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்ளவும் - 1 கரண்டி
  • எண்ணெய் - முறுக்கை பொரிப்பதற்கு
  • உப்பு - 1 தேக்கரண்டி அல்லது தேவையான அளவு

எளிதாகச் செய்யக்கூடிய வெண்ணெய் முறுக்கு செய்வது எப்படி | How to make Easy Butter Murukku in Tamil

  1. ஒரு பாத்திரத்தில், அரிசி மாவு, உளுந்து மாவு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  2. இப்போது ஒரு கரண்டி சூடான எண்ணெயை இவற்றோடு சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ளவும்.
  3. மாவை 3 அல்லது 4 பங்காக பிரித்துக்கொள்ளவும்.
  4. ஒரு பாகத்தில் தண்ணீர் சேர்த்து அடர்த்தியான ஒரு மாவாக அரைத்துக்கொள்ளவும்.
  5. ஒரு முறுக்கு அச்சியை எடுத்து ஒற்றை நட்சத்திரத் தட்டைப் போட்டு உள்ளே எண்ணெயைத் தடவிக்கொள்ளவும்.
  6. இப்போது மாவை எடுத்து உள்ளே வைத்து மாவை வட்ட வடிவத்தில் சூடான எண்ணெயில் அழுத்தவும்.
  7. இரண்டு பக்கமும் மொறுமொறுப்பாகும் வரை வேகவிடவும். எண்ணெயில் அதிக நேரம் விடவேண்டாம். இல்லையேல் முறுக்கு தீய்ந்துவிடும்.

எனது டிப்:

முறுக்கு தயாரிக்கக் கொஞ்சம் சீரகத்தையும் நீங்கள் பயன்படுத்தலாம். உளுத்தம்பருப்பை வறுப்பதற்கு, ஒரு கடாயில் உளுத்தம்பருப்பை வேறெதும் சேர்க்காமல் வறுக்கவும், பொன்னிறமாகும்வரை. அதன்பிறகு ஆறவைத்து, மென்மையாக அரைத்துக்கொள்ளவும்.

Reviews for Easy Butter Murukku in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.