வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் சாதம்

Photo of coconut milk rice by Vaishnavi Prakash at BetterButter
480
2
0.0(0)
0

தேங்காய் பால் சாதம்

Sep-07-2018
Vaishnavi Prakash
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் சாதம் செய்முறை பற்றி

புலவ் வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பாஸ்மதி அரிசி அரை கிலோ
  2. தேங்காய் பெரியது ஒன்று
  3. ரீபைண்ட் ஆயில் 100ml
  4. பட்டை லவங்கம் ஏலக்காய் பிரிஞ்சி இலை தாளிக்க
  5. பச்சை மிளகாய் ஆறு
  6. வெங்காயம் நான்கு
  7. இஞ்சி பூண்டு விழுது ஒன்றரை மேசைக்கரண்டி
  8. கொத்தமல்லி அரை கட்டு
  9. புதினா அரை கட்டு
  10. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாஸ்மதி அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும்
  2. தேங்காயை துருவி பால் எடுக்கவும்
  3. குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் ஏலக்காய் தாளிக்கவும்
  4. மசாலா பொரிந்தவுடன் பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. வெங்காயம் நன்கு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  6. இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் கொத்தமல்லி புதினா சேர்த்து வதக்கவும்
  7. அனைத்தும் நன்கு வதங்கி எண்ணெய் வெளி வரும்போது அரிசியை சேர்த்து 1 நிமிடம் கலக்கவும்
  8. ஒரு கப்பிற்கு 2 கப் வீதம் தேங்காய் பால் ஊற்றவும்
  9. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
  10. ஒரு கொதிவந்தவுடன் குக்கரை மூடி 3 விசில் விட்டு ஆவி வெளியேறியதும் திறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்