வீடு / சமையல் குறிப்பு / தேங்காய்ப்பால் புலாவ்

Photo of Coconut milk pulao by hajirasheed haroon at BetterButter
142
1
0.0(0)
0

தேங்காய்ப்பால் புலாவ்

Sep-07-2018
hajirasheed haroon
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய்ப்பால் புலாவ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்மதி அரிசி ஒரு கப்
  2. தேங்காய் பால் ஒரு கப்
  3. வெங்காயம் 4
  4. தக்காளி-2
  5. புதினா மல்லி இலை
  6. பச்சை மிளகாய் 4
  7. பொரித்த வெங்காயம் ஒரு கப்
  8. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  9. எண்ணை தேவையான அளவு
  10. தயிர் கால் கப்
  11. பட்டை ஏலக்காய் கிராம்பு தாளிப்பதற்கு
  12. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. பாசுமதி அரிசியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்
  3. நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்
  4. குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் தக்காளி புதினா மல்லி இலை பச்சை மிளகாயை இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும் பிறகு ஒரு டம்ளர் தேங்காய் பால் கால் டம்ளர் தயிர் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் தண்ணீர் கொதி வந்தவுடன் ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியை அதில் சேர்த்து ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை ஆப் செய்துவிடவும்
  5. பொரித்து வைத்துள்ள வெங்காயத்தை அதில் சேர்த்து தம் வைத்து விடவும்
  6. சுவையான தேங்காய்ப்பால் புலாவ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்