வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழ சாக்லேட் கேக்

Photo of Banana choclate cake by Adaikkammai Annamalai at BetterButter
483
1
0.0(0)
0

வாழைப்பழ சாக்லேட் கேக்

Sep-07-2018
Adaikkammai Annamalai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழ சாக்லேட் கேக் செய்முறை பற்றி

இது மிகவும் சுவையான கேக் ,, வீட்டிலே சுலபமாக செய்யக்கூடிய பிறந்தநாள் கேக் செய்முறை,, இது என் அத்தை மாமா அவர்களின் 40 வது வருட கல்யாண தினத்திற்கு செய்த கேக், அதனால் இதை மிகவும் சுவையாக செய்துள்ளேன்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃப்யூஷன்
  • பேக்கிங்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேக் செய்ய தேவையான பொருட்கள்;
  2. மைதா - 1 கப்
  3. சர்க்கரை -3/4 கப்
  4. பால் - 1/2 கப்
  5. காணோலோ ஆயில் - 1/2 கப்
  6. வாழை பழம் - 2
  7. பேக்கிங் சோடா - சிட்டிகை
  8. பேக்கிங் பவுடர் - 1 tsp
  9. பால் பவுடர் - 3 tsp
  10. வெண்ணிலா எஸ்ஸெணஸ் - 1 tsp
  11. சாக்லேட் ப்ராஸ்டிங் செய்ய தேவையான பொருட்கள்;
  12. சாக்லேட் பார்ஸ் - 1/2 காம்பௌண்ட்
  13. பட்டர் - 1/2 கப்
  14. ஐசிங் சுகர் - 1/2 கப்

வழிமுறைகள்

  1. முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
  2. பின் மைதா, சீனி, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், பால் பவுடர் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கிளறி கொள்ளவும்
  3. அதன் பின் மசித்த வாழை பழம், பால், எண்ணெய், வெண்ணிலா எஸ்ஸென்ஸ, பால் கொஞ்ச கொஞ்சமாக சேர்த்து கிளறவும்
  4. இவை அனைத்தையும் சேர்த்து ப்ளேன்ட் செய்யவும்
  5. பின் இந்த பதத்திற்கு வந்த பின் கில்லாடி ஒன்று சேர்த்து எடுத்து கொள்ளவும்
  6. பிறகு கேக் பேனை பாயில் சீட் அல்லது பார்ச்சமெண்ட் பேப்பர் போட்டு அதில் தயாரா செய்த கேக் மாவை சேர்க்கவும்
  7. ஓவனை ப்ரிஹீட் செய்து 180℃ 40 - 45 நிமிடம் பேக் செய்யவும்
  8. அரை மணி நேரத்தில் டூத் பிக் வைத்து தயார் ஆனதா என்று பரிசோதிக்கலாம்
  9. அப்படி ஒட்டாமல் வந்துவிட்டால் கேக் தயார்,, கேக் ஆரிய பின் இரண்டாக பிரித்து எடுத்து கொள்ளவும்
  10. மேலே ப்ராஸ்டிங் செய்ய அடுப்பில் ஒரு அகல பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதன் மேல் ஒரு அகல பௌலில் சாக்லேட் உறுக வைக்கவும்
  11. பின் சாக்லேட் நன்கு உருகிய வுடன் இறக்கி பட்டர் மற்றும் ஐசிங் ஷிகர் சேர்க்கவும் ,,
  12. சேர்த்து நன்றாக ப்ளேண்ட் செய்யவும்
  13. பிறகு கிரீமியாக வந்த பின் எடுத்து இரண்டாக எடுத்த ஒரு பகுதியில் சர்க்கரை தண்ணீர் தடவி கிரீமை தடவவும் மிதியாக
  14. பின் மறு பக்கத்தை சேர்த்து மேலே தடவி சுற்றி தடவி முழுவதுமாக தடவவும்
  15. பின் பிடித்தவாறு அலங்கரித்து கேக்கை சுவைக்கலாம், நான் சுற்றி பிஸ்கட் ,மேலே சாக்கோ சிப் மற்றும் சாக்லேட் உருண்டைகள் வைத்து செய்துள்ளேன்
  16. ஒரு பகுதி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்