வீடு / சமையல் குறிப்பு / கோக்கோ தேங்காய் சிரட்டையில் தேங்காய்ப்பால் மூஸ்

Photo of Coconut Mousse in Chocolate Coconut Shell by Hameed Nooh at BetterButter
885
4
0.0(0)
0

கோக்கோ தேங்காய் சிரட்டையில் தேங்காய்ப்பால் மூஸ்

Sep-07-2018
Hameed Nooh
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோக்கோ தேங்காய் சிரட்டையில் தேங்காய்ப்பால் மூஸ் செய்முறை பற்றி

கோகோவில் தேங்காய் சிரட்டை போன்று செய்து அதிலே தேங்காய் பால் மற்றும் விப்பிங் க்ரீம் சேர்த்து மூஸை நிரப்பி சாப்பிடக்கூடிய ஒரு சுவையான பதார்த்தமாகும்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃபிரெஞ்ச்
  • விஸ்கிங்
  • ப்லெண்டிங்
  • ஃப்ரீஸிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய்ப் பால் ஒரு கப்
  2. தேங்காய் கிரீம் அரை கப்
  3. விப்பிங் கிரீம் ஒரு கப்
  4. சர்க்கரை 3 மேஜைக்கரண்டி
  5. ஜெலட்டின் ஒரு மேசைக்கரண்டி
  6. வெனிலா எசன்ஸ் 2 தேக்கரண்டி
  7. உப்பு ஒரு சிட்டிகை
  8. தேங்காய் துருவல் கால் கப்
  9. மில்க் காம்பௌண்ட் சாக்லேட் ஒரு கப்
  10. பொடித்த பாதாம் முந்திரி 2 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் ஜெலன்டினை குளிர்ந்த நீரில் போட்டு 10 நிமிடங்கள் வைக்கவும்
  2. ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால் தேங்காய் க்ரீம் மற்றும் உப்பு ஆகியவற்றைப் போட்டு கொதிக்க விடாமல் சூடாக்கவும்
  3. பிறகு ஜெலட்டின் கலவையை ஊற்றி நன்றாக கரையும் வரை கிளறி அடுப்பை அணைக்கவும்
  4. ஒரு பாத்திரத்தில் விப்பிங் க்ரீம் மற்றும் சர்க்கரையை சேர்த்து மிருதுவாகும் வரை பீட் செய்யவும்
  5. ஆறிய தேங்காய்ப்பால் ஜெலட்டின் கலவையோடு விப்பிங் க்ரீமை மற்றும் வெனிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து மெதுவாக கலக்கவும்.
  6. தேங்காய் துருவலை சிறிது வறுத்துக் கொள்ளவும்.
  7. பிறகு கோக்கோ தேங்காய் சிரட்டை செய்வதற்கு கோக்கோவை சிறிது சிறிதாக வெட்டி பாத்திரத்தில் போட்டு டபுள் பாயிலிங் செய்யவும்
  8. கோக்கோ நன்றாக உருகியதும் சிறிய அளவிலான பலூனை ஊதி அதனை கோக்கோ கலவையில் டிப் ஒரு தட்டில் வைத்து ப்ரீட்ஜரில் உறைய வைக்கவும்
  9. 5 நிமிடங்கள் கழித்து மறுமுறையும் கோக்கோவில் டிப் செய்து சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைக்கவும்.
  10. பிறகு மூன்றாம் முறையாக கோக்கோவில் ப்ரஷ்ஷை டிப் செய்து உறைய வைத்த கோக்கோ சிரட்டையில் கோடுகள் போல வரையவும்.
  11. பலூனை ஒரு ஊசியைக் கொண்டு உடைத்து கவனமாக பிரித்தெடுக்கவும்.
  12. இதனை 10 நிமிடங்கள் பிரிட்ஜில் வைத்து தேங்காய் பால் மூஸை உள்ளே நிரப்பி குளிரூட்டி மேலே வறுத்த தேங்காய் துருவல் மற்றும் பொடித்த நட்ஸ் ஆகியவை தூவி சாப்பிடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்