வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் ஊத்தப்பம்

Photo of Coconut uthappam by Krishnasamy Vidya Valli at BetterButter
613
0
0.0(0)
0

தேங்காய் ஊத்தப்பம்

Sep-07-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் ஊத்தப்பம் செய்முறை பற்றி

வெறும் தோசை செய்து சைட் டிஷ் தனியாக செய்வதற்கு பதிலாக தேங்காய் ஊத்தப்பம் செய்து அப்படியே சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தேங்காய்த் துருவல் கால் கப் + 1 மேஜைக்கரண்டி
  2. தோசை மாவு இரண்டு குழம்பு கரண்டி
  3. உப்பு நான்கு சிட்டிகை
  4. காஷ்மீரி சில்லி பொடி கரம்மசாலா மஞ்சள் பொடி தனியா பொடி சீரகப் பொடி தலா 4 சிட்டிகை
  5. கொத்தமல்லி இலை சிறிது
  6. தாளிக்க தேவையானவை
  7. எண்ணெய் கால் தேக்கரண்டி
  8. கடுகு உளுத்தம்பருப்பு தலா கால் தேக்கரண்டி
  9. பெருங்காயம் 2 சிட்டிகை
  10. தோசை வார்ப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து தேங்காய் சேர்த்து வதக்கவும்
  2. உப்பு மற்றும் எல்லா பொடிகளையும் சேர்த்து கிளறவும்
  3. இறக்கி கொத்தமல்லி இலை தூவி கலந்து கொள்ளவும்
  4. தோசைக்கல்லில் இரண்டு சிறிய ஊத்தப்பமாக மாவு விட்டு க் கொள்ளவும்
  5. அதன் மேல் செய்து வைத்துள்ள கலவையை ஸ்டஃப் செய்யவும்
  6. ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும்
  7. சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்