வீடு / சமையல் குறிப்பு / ராகி இனிப்பு பணியாரம் ராகி காரப் பணியாரமும்

Photo of Ragi sweet paniyaram and Ragi kara paniyaram by Jayasakthi Ekambaram at BetterButter
939
0
0.0(0)
0

ராகி இனிப்பு பணியாரம் ராகி காரப் பணியாரமும்

Sep-08-2018
Jayasakthi Ekambaram
540 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ராகி இனிப்பு பணியாரம் ராகி காரப் பணியாரமும் செய்முறை பற்றி

ராகியை ஊற வைத்து அரைத்து செய்யும் பணியாரங்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ராகி 150 கிராம்
  2. இட்லி அரிசி 100 கிராம்
  3. பச்சரிசி 100 கிராம்
  4. உளுந்து 75 கிராம்
  5. வெங்காயம் ஒன்று
  6. பச்சை மிளகாய் ஒன்று
  7. தேங்காய் அரை மூடி
  8. கடுகு ஒரு ஸ்பூன்
  9. கொத்தமல்லித்தழை ஒரு கைப்பிடி அளவு
  10. வெல்லம் 150 கிராம்
  11. ஏலக்காய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  12. நல்லெண்ணெய் 100 கிராம்
  13. நெய் 25 கிராம்

வழிமுறைகள்

  1. ராகி இட்லி அரிசி பச்சரிசி மூன்றையும் கலந்து 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
  2. உளுந்தை தனியாக ஊற வைக்க வேண்டும்
  3. இரண்டு மணி நேரம் கழித்து அரிசியையும் உளுந்தையும் தனித்தனியாக அரைத்து கலந்து கொள்ள வேண்டும்
  4. இந்த மாவில் ஒரு ஸ்பூன் உப்பு போட்டு ஏழு மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்
  5. 7 மணி நேரத்திற்கு பிறகு இந்த மாவை இரண்டாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்
  6. தேங்காயைத் துருவிக் கொள்ள வேண்டும்
  7. வெல்லத்தை பாகு காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும்
  8. ஒரு பகுதி மாவில் துருவிய தேங்காயையும் வெல்லத்தையும் கலந்து கொள்ள வேண்டும்
  9. அடுப்பில் குழிப்பணியாரக் கல்லை வைத்து எண்ணெயையும் நெய்யையும் கலந்து குழியில் ஊற்ற வேண்டும்
  10. வெல்லம் கலந்த மாவை ஊற்றி இனிப்பு பணியாரம் சுட்டு எடுக்க வேண்டும்
  11. பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் கொத்தமல்லித்தழை தேங்காய் ஆகியவற்றை வதக்கி ஆற வைத்து இன்னொரு பகுதி மாவில் கலந்து கொள்ள வேண்டும்
  12. இப்போது அடுப்பில் குழிப்பணியாரக் கல்லை வைத்து குழிகளில் நல்லெண்ணை ஊற்ற வேண்டும்
  13. இப்பொழுது வெங்காயம் கலந்த மாவை குழிகளில் ஊற்றி காரப் பணியாரம் சுட்டு எடுக்க வேண்டும்
  14. இதை சூடாக சட்னியுடன் பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்